ETV Bharat / state

இடைநிலை ஆசிரியர்கள் முதல் வாச்சாத்தி தீர்ப்பு வரை.. முதல்வரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அளித்த கோரிக்கை மனு விவரம்! - இன்றைய சென்னை செய்திகள்

CPI (M) leaders request to Chief Minister Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், வாச்சாத்தி வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கைகளை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை அளித்துள்ளனர்.

Marxist Communist leaders request to fulfill the teachers request and other request petition to Chief Minister Stalin
தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 6:00 PM IST

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோர் இன்று (அக்.08) அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

அப்போது, மகளிர் உரிமைத் தொகை வழங்கி மகளிரின் ஊதியமில்லா உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் நடவடிக்கைக்கும், விடுபட்டு போனவர்களுக்கு மீண்டும் பெறுவதற்கு வாய்ப்பளித்தமைக்கும் முதலமைச்சருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்தியா கூட்டணி சார்பில் அகில இந்திய அளவில் 5 முக்கிய நகரங்களில் மக்கள் பிரச்சனைகளை வலியுறுத்தி பெருந்திரள் மாநாட்டை நடத்திட சிபிஐ பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

அந்த அடிப்படையில், சென்னையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு மாநாட்டை இந்தியா கூட்டணி சார்பில் நடத்துவது தொடர்பாகவும், மேலும் பல கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினர். அந்த மனுக்களில் இடம்பெற்றிருந்த கோரிக்கைகள் பின்வருமாறு,

  • வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீதான வன்முறை வழக்கில் 31 ஆண்டுகளாக நடந்து வரும் நீண்ட, நெடிய சட்டப்போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை அமல்படுத்துவது, குறிப்பாக வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு, அரசு வேலை, நிரந்தர வீடு மற்றும் வாச்சாத்தி கிராமத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், அதிகாரிகள் மீது நடவடிக்கை உள்ளிட்டவற்றை அரசு தரப்பில் நிறைவேற்றுவது.
  • மத்திய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக கடுமையான தொழில் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாப்பதற்கு மின்சார வாரியத்தின் நிலை கட்டண உயர்வு மற்றும் பீக் ஹவர் கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்ப பெறுவது.
  • நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 36 முஸ்லீம் கைதிகளை விடுதலை செய்வது.
  • அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்கிடுவது.
  • பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது, சரண்விடுப்பு வழங்குவது, சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது, தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது, அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது.
  • இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது, காலை சிற்றுண்டித் திட்டம் உள்ளிட்ட அரசின் நலத் திட்டங்களை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் வழங்குவது.
  • அரசாணை எண் 354 படி மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது, கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது.
  • மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டு 5 மாதங்கள் ஆகியும் இதுவரை வழங்கப்படாமல் இருக்கும் நிலுவைத் தொகையினை வழங்குவது, ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது, கேங் மேன் பணியாளர்களை நியமிப்பது.
  • திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி மாணவர் சின்னத்துரை, தங்கை சந்திரா செல்வி ஆகியோரின் பள்ளி படிப்பை தொடரவும், அக்குடும்பத்திற்கு அரசு வீடும், வேலையும் வழங்குவது, சந்திரா செல்விக்கு தமிழக அரசின் வீர தீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 107 பதக்கங்கள் வென்று சாதனை.. பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.