சென்னை: கடல்சார் தொன்மை வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு சில ஆண்டு காலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று (அக்.5) புற்றுநோய் காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர் இன்று (அக்.6) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
"தமிழ் வரலாற்று ஆய்வாளரான திரு. ஒரிசா பாலு (எ) சிவபாலசுப்பிரமணி அவர்கள் மறைந்த செய்தியால் வேதனையடைந்தேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழன்பர்கள் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார். pic.twitter.com/P32hk5APjh
">"தமிழ் வரலாற்று ஆய்வாளரான திரு. ஒரிசா பாலு (எ) சிவபாலசுப்பிரமணி அவர்கள் மறைந்த செய்தியால் வேதனையடைந்தேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 6, 2023
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழன்பர்கள் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார். pic.twitter.com/P32hk5APjh"தமிழ் வரலாற்று ஆய்வாளரான திரு. ஒரிசா பாலு (எ) சிவபாலசுப்பிரமணி அவர்கள் மறைந்த செய்தியால் வேதனையடைந்தேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 6, 2023
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழன்பர்கள் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார். pic.twitter.com/P32hk5APjh
ஒரிசா பாலு திருச்சி உறையூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சிவ பாலசுப்ரமணியன் பல ஆண்டுகள் இவர், வேலையின் காரணமாக ஒரிசாவில் வாழ்ந்து வந்தார். இதனால், இவரை அனைவரும் ஒரிசா பாலு என்று அழைக்கப்பட்டு வந்தனர். மேலும், வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டும். ஆமைகள் மூலம் நீரோட்டத்தை அறிந்து, பழங்கால தமிழர்கள் கடற்பயணம் மேற்கொண்டதைக் கண்டறிந்து புத்தங்கள் மூலமாகவும், இவரின் பேச்சின் மூலமாகவும் வெளியில் கொண்டு வந்தார்.
மேலும், இவர் தொடர்ந்து, கடல் சார்ந்த ஆராய்ச்சிகள் மூலம் குமரிகண்டம், பூம்புகார், மாமல்லபுரம் உள்ளிட்ட கடல் சார்ந்த ஆய்வுகளில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக அறியப்பட்டு வருகிறது. இவரின் குமரிகண்டம் ஆய்வு குறித்து வெளிநாடுகள் பயணம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த சிலநாட்களாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று இரவு (அக்.5) அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை அடுத்த குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழர்களின் மதிப்பை உயர்த்துவதற்காக, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் என்பது தரையில் இருக்கும் பண்டைய தமிழரின் சுவடுகளைவிடக் கடலில் தமிழர்களின் சுவடுகள் அதிகமாக இருக்கக்கூடும் என்று தொடர்ந்து கடல்சார் ஆய்வுகளை நடத்தி வந்தார், மேலும் பண்டைய தமிழர்களின் கடல்வழி பயணம் குறித்து, குமரிகண்டம் குறித்தும், குமரிகண்டம் என்பது இப்போது இருக்கும் மடகாஸ்ஹர் பகுதி வரை இருக்கக் கூடும் என்று கடல் சார்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரிசா பாலு மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். "தமிழ் வரலாற்று ஆய்வாளரான ஒரிசா பாலு என்ற சிவபாலசுப்பிரமணி மறைந்த செய்தி கேட்டு வேதனையடைந்தேன். ஒரிசா பாலு, தமிழர்களின் வரலாற்றுத் தொடர்புகளைக் கடல்வழியே தேடிக் கண்டு வெளிப்படுத்துவதில் மிகுந்த முனைப்புடன் செயலாற்றி வந்தவர் ஆவார். தன்னலம் கருதாத தமிழ்நலம் காக்கும் அவரது உழைப்பும், ஆர்வமும் என்றும் மதிக்கப்படும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழன்பர்கள் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என செய்தி குறிப்பில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: குன்னூர் பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய அமைச்சர்!