ETV Bharat / state

மழை நீர் வடிகாலில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சாலையோரம் இருந்த மழை நீர் வடிகாலில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Dec 1, 2019, 1:57 PM IST

rain water canal
Man died in rain water canal

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள மன்னூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஷேக் அலி (வயது 46). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை சிடிஎச் சாலையில் நடந்து சென்றபோது மழை நீர் வடிகாலில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார்.

இதனை அடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஷேக் அலியை மீட்க அம்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் சுமார் இரண்டு மணி நேரமாக நீரில் மூழ்கிய ஷேக் அலியை தேடினர்.

ஷேக் அலியின் உடலை மீட்கும் தீயணைப்பு துறையினர்

இதனிடையே வடிகாலில் ஷேக் அலி விழுந்த தகவல் கிடைத்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். ஷேக் அலியை கண்டுபிடிக்க தாமதமாவதால் அவரது உயிருக்கு ஆபத்து என ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிடிஎச் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர். பின்னர் சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்தில் இருந்து தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் இரண்டு வாகனங்கள் கொண்டு வரப்பட்டது. அதில் ஒரு வாகனம் செயல்படாமல் பழுதானது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை வாலியில் பிடித்து வெளியேற்றினர். பின்னர் மிகுந்த போராட்டத்தின் பிறகு ஷேக் அலியின் உடலைக் கைப்பற்றினர்.

பேட்டி: பீர் முகம்மது

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: புதுச்சேரி டூ குமரி... சிறுவனின் 580 கிலோ மீட்டர் சைக்கிள் சாதனை பயணம்!

Intro:அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சாலையோரம் இருந்த மழை நீர் வடிகால்வாயில் தவறி விழுந்து ஒருவர் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Body:அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சாலையோரம் இருந்த மழை நீர் வடிகால்வாயில் தவறி விழுந்து ஒருவர் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே மன்னூர்பேட்டையை சேர்ந்தவர் ஷேக் அலி/46. இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை சிடிஎச் சாலையில் நடந்து சென்றபோது அவ்வழியாக சென்ற மழை நீர் வடிகால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதனை அடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஷேக் அலியை மீட்க அம்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் சுமார் 2 மணி நேரமாக நீரில் மூழ்கிய ஷேக் அலியை தேடினர்.இதனிடையே வடிகால்வாயில் ஷேக் அலி விழுந்த தகவல் கிடைத்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.அதுவரை அங்கு சென்னை மாநகராட்சி 7 வது மண்டலத்தில் இருந்து யாரும் வரவில்லை என்ற காரணத்தாலும் ஷேக் அலியை கண்டுபிடிக்க தாமதமாவதால் அவரது உயிருக்கு ஆபத்து என ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிடிஎச் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போரட்டத்தை கலைத்தனர்.பின்னர் அம்பத்தூர் 7 வது மண்டலத்தில் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் இரண்டு வாகனங்கள் கொண்டு வரப்பட்டது. அதில் ஒரு வாகனம் செயல்படாமல் பழுதானது.எனவே தீயனைப்பு வீரர்கள் தண்ணீரை வாலியில் பிடித்து வெளியேற்றினர்.பின்னர் மிகுந்த போராட்டத்தின் பிறகு ஷேக் அலியை உடலை கைப்பற்றினர்.ஆனால் அவர் உயிர் இழந்து இருந்தார்.பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேட்டி:பீர் முகம்மதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.