சென்னை: திருநெல்வேலி மாவட்டம், மலையடிகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (எ) வேல்துரை(33), தனது மனைவி கோமதி உடன் ஈக்காட்டுத்தாங்கல் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், இவரது மனைவிக்கு கோமதிக்கும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கால்டாக்சி ஓட்டுநர் வீரபுத்திரன்(37) என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதனால், தனது கணவர் வெளியூர் சென்ற நேரத்தில் கோமதி, அவருடன் உல்லாசமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இவை குறித்து அறிந்த கோமதியின் கணவர், தனது மனைவியைக் கண்டித்த நிலையில் இருவருக்கும் இடையேயான தொடர்பை துண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வீரபுத்திரன், நேற்று (டிச.25) கோமதியின் வீட்டிற்குச் சென்று சண்டையிட்டுள்ளார்.
அப்போது சங்கருக்கும் வீரபுத்திரனுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில், வீரபுத்திரன் கத்தியால் கோமதியின் கணவர் சங்கரை குத்திக் கொலை செய்தார். பின், அங்கிருந்து தப்பிக்க முயன்ற அவரை அப்பகுதியிலிருந்த வடமாநில வாலிபர்கள் பிடித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற கிண்டி போலீஸார் சங்கர் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வீரபுத்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கண்ணாடி துண்டுகளுடன் காயத்திற்கு கட்டு: ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அலட்சியம்