சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குமுதா (26) என்பவர் தனது கணவருடன் குரோம்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில், போக்குவரத்து காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (செப்.12) வழக்கம் போல் குரோம்பேட்டை தனியார் உணவகம் அருகில் பணியில் இருந்தார்.
அப்போது அந்த உணவகத்திற்குச் சென்ற நபர் உணவகத்தில் ரகளையில் ஈடுபட்டார். இதனைப்பார்த்த போக்குவரத்து காவலர் குமுதா தட்டிக் கேட்டபோது அருகே இருந்த கல்லை எடுத்து குமுதாவின் தலையில் தாக்கிவிட்டுச் சென்றார். இதை யாரும் தடுக்காத நிலையில் ரத்த காயத்துடன் குமுதா கீழே விழுந்தார்.
இதைக்கண்ட வாகன ஓட்டிகள் காவலரைத் தாக்கிய நபரை மடக்கிப் பிடித்தனர். பின், அருகில் உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் குமுதாவை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத்தொடர்ந்து அங்கு சென்ற குரோம்பேட்டை காவல் துறையினர், காவல் துறையினரைத் தாக்கிய நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது, பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது. மேலும், காவல் துறையினரைத் தாக்கியது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:நீலகிரி மாவட்டத்தின் ஆட்சிதலைவராக மு.அருணா பொறுப்பேற்றுக் கொண்டார்!