ETV Bharat / state

உள்ளாட்சி தேர்தல் - மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடப்போவதாக அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தல்
author img

By

Published : Sep 16, 2021, 3:27 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தலும், மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர், கிராம ஊராட்சித் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்டு மறைமுக தேர்தலும் நடத்தப்படுகிறது. மொத்தம் 27 ஆயிரத்து மூன்று பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் தனித்துப்போட்டி

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சித் தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கமல் ட்விட்

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நமது முதல் உள்ளாட்சித் தேர்தல் இது.

புதிய உத்வேகத்துடனும், ஆற்றலுடனும் இந்தத் தேர்தலை எதிர்கொள்வோம். களத்தில் நிற்கும் உங்கள் கரங்களுக்கு வலு சேர்க்க நானும் உங்கள் பகுதிக்கு வருகை தரவிருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உடனடியாக விண்ணப்பிக்க ஆன்லைன் வசதி

மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிட விரும்புபவர்கள் அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகம், மாநிலத் தலைமை அலுவலகத்தில் நேரடியாக விருப்ப மனுப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

உடனடியாக விண்ணப்பிக்கும் பொருட்டு ஆன்லைன் வசதியும் (https://maiam.com/application-form.php) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மாவட்ட, மாநில தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளைத் தொடர்புகொள்ளலாம்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் திமுக நிரந்தர ஆட்சி...சபதம் ஏற்க தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.