ETV Bharat / state

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 10 ஆண்டுகள் தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்

எட்டு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், குழந்தையின் படிப்பைத் தொடர உரிய உதவியை வழங்குவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Madras High Court sentenced a man from Tirupur to 10 years in 8 year old girl sexual harassment case
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
author img

By

Published : Mar 1, 2023, 10:30 PM IST

சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்த கேரளாவைச் சேர்ந்த பெண்ணின் 8 வயது மகளை, பக்கத்து வீட்டில் வசித்த நபர் பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமியின் தாய் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், உரிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்து கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரதச்சக்கரவர்த்தி, விடுதலை உத்தரவை ரத்து செய்து குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டும், குழந்தை கல்வியைத் தொடர்வதற்கும், வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் அரசு உதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி சமூக நலத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை: தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.