ETV Bharat / state

மனநல மறுவாழ்வு மையங்களில் தொடர் சோதனை நடத்தப்பட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

author img

By

Published : Apr 10, 2023, 8:06 PM IST

தமிழ்நாட்டில் இயங்கி வரும் மனநல மறுவாழ்வு மையங்களில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டுமென மனநல மருத்துவ இயக்குனரகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனநல மறுவாழ்வு மையங்களில் தொடர் சோதனை நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்
மனநல மறுவாழ்வு மையங்களில் தொடர் சோதனை நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்.

செங்கல்பட்டு: பல்லாவரத்தை சேர்ந்த சையத் அலி ஃபாத்திமா என்பவரின் கணவர் முகமது ரஹீம். சமீபத்தில் இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக அவரை சிட்லப்பாக்கத்தில் உள்ள எவர் கிரீன் மையத்தில் அனுமதித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் முகமது ரஹீமின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவரை பார்ப்பதற்காக குடும்பத்தினர் நேரில் சென்றுள்ளனர். அப்போது குடும்பத்தினர் சென்று பார்த்தபொழுது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவர் கிரீன் மையத்தின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தாக்கியதாலேயே தமது கணவர் உயிரிழந்ததால் உரிய இழப்பீடு வழங்க கோரி அவரது மனைவி கடந்த 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் இச்சம்பவம் தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்ட அந்த மறுவாழ்வு மையம் உரிய அனுமதி எதுவும் பெறவில்லை என்றும் கூறினார்.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை நான்கு மாதத்திற்குள் விசாரித்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட எவர் கிரீன் மறுவாழ்வு மையத்தில் ஆய்வு நடத்த சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவ இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் அனைத்து மனநல மறுவாழ்வு மையங்களிலும் அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கலாஷேத்ரா பாலியல் புகார்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.