ETV Bharat / state

அரசுப் பணியில் 100% தமிழர்கள்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்ட அறிவிப்பாணை

அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை என அறிவித்துள்ளதால், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளுக்காக 2019ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்துசெய்யக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Dec 8, 2021, 6:25 AM IST

சென்னை: விழுப்புரத்தைச் சேர்ந்த சிவராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்துள்ளார். அந்த மனுவில், பொறியியல் படிப்பு முடித்து ஆசிரியர் பணி மீதான ஆர்வத்தால் விழுப்புரத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் விரிவுரையாளராகத் தற்காலிகமாகப் பணிபுரிந்துவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2017-18ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, அந்தத் தேர்வை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, புதிய தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் 2019ஆம் ஆண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பாணை வெளியிட்டதாகவும், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான அந்தத் தேர்வு இன்று (டிசம்பர் 8) தொடங்கி டிசம்பர் 12ஆம் தேதிவரை தேர்வு நடைபெற உள்ளதால், அதற்கான ஹால்-டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தொழில்நுட்ப கல்லூரிக்கான விரிவுரையாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பில் தமிழ் மொழிப்பாடமாகப் படித்து தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் விதிமுறை உள்ளதாகவும், அவ்வாறு தமிழ் படிக்காதவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்துகின்ற தேர்வில் பணி கிடைத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் மொழிப் பாடத்தில் தேர்ச்சிபெற வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசுப் பணி 100% தமிழர்களுக்கே

இந்நிலையில், டிசம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியிடங்களில் 100 விழுக்காடு தமிழர்களையே நியமிக்கும் வகையில் புதிய அரசாணை வெளியிட்டு உள்ளதைச் சுட்டிக்காட்டி, இன்று தொடங்கவுள்ள தேர்வுக்கு தமிழ் தெரியாத வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் விண்ணப்பித்திருப்பதால், 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு நேற்று (டிசம்பர் 7) விசாரணைக்கு வந்தது. மனு குறித்து தமிழ்நாடு அரசு, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 21ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க: ரஜினியை சந்தித்த சசிகலா;பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.