ETV Bharat / state

மாணவர்களை சேர்த்துக்கொள்ள மறுக்கும் பள்ளிகள்: அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: கடந்தாண்டு பள்ளி கட்டண நிலுவைத் தொகையைச் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் சேர்த்துக்கொள்ள மறுப்பதாக எழும் புகார் குறித்து பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

madras-hc-verdict-on-online-classes
madras-hc-verdict-on-online-classesmadras-hc-verdict-on-online-classes
author img

By

Published : Jul 8, 2021, 6:25 PM IST

இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகேந்திரன் தொடர்ந்த வழக்கு இன்று (ஜூலை 8) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடப்பு 2021-22ஆம் கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் கலந்துகொள்ள, கடந்தாண்டு கட்டண பாக்கியைச் செலுத்தும்படி தனியார் பள்ளிகள் பெற்றோரை வற்புறுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.

கட்டண பாக்கியைச் செலுத்தும்படி நிர்பந்திக்காமல், மாணவர்களை அடுத்த வகுப்புக்கு முன்னேற்றுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு 2021-22ஆம் கல்வியாண்டுக்கான புத்தகங்களை வழங்கி, ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

கட்டண பாக்கியைத் தள்ளுபடி செய்து, ஆன்லைன் வகுப்புகளைத் திறமையான முறையில் நடத்த மாற்று நடைமுறைகளைக் கண்டறிய கல்வித் துறை வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைப்பதுடன், குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுத் தரப்பில் முன்னிலையான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுப்படி கடந்தாண்டு 75 விழுக்காடு மட்டுமே பள்ளிக் கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க குழு அமைத்து அது செயல்பட்டுவருவதாகவும் விளக்கமளித்தார். இதையடுத்து, வழக்கு தொடர்பாக மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல்செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பத்திரப்பதிவுத் துறை ஊழல் குறித்த அறிக்கையைத் தாக்கல்செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.