ETV Bharat / state

மெட்ராஸின் வரலாறு 380 ஆண்டா? ஈராயிரம் ஆண்டா? - chennai central

சென்னை தனது 382ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அதன் உண்மையான வயது குறித்து பார்க்கலாம்.

age of madras  madras day  மெட்ராஸ் தினம்  madras  மெட்ராஸ்  வட சென்னை  தலைநகரம்  chennai city  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்
madras day
author img

By

Published : Aug 21, 2021, 11:01 PM IST

Updated : Aug 22, 2021, 8:32 AM IST

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரமும், நாட்டின் நான்காவது பெரிய நகரமுமான சென்னை, இந்தாண்டு தனது 382ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளது.

சுதந்திர இந்தியாவுக்கு முன்பு மதராசபட்டினம் என்று அழைக்கப்பட்ட இந்த இடம், தற்போது அனைத்து நாட்டவரும் அறியும் சென்னை மாநகரமாக இருக்கிறது.

ஏன் கொண்டாட வேண்டும்

இந்த மாநகரத்தின் வளர்ச்சியை கொண்டாடும் விதமாக வருடந்தோறும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி 'மெட்ராஸ்' தினம் என கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பல நிகழ்ச்சிகள் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.

age of madras  madras day  மெட்ராஸ் தினம்  madras  மெட்ராஸ்  வட சென்னை  தலைநகரம்  chennai city  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  மெட்ராஸ் வயது  புனித ஜார்ஜ் கோட்டை  grorge fort  chennai central  மாநகராட்சி
சென்னை சென்ட்ரல்

இந்த வருடமும் 382ஆவது தினத்தை கொண்டாட சென்னைவாசிகளுக்கு பல நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், 'சென்னை 2000 பிளஸ் டிரஸ்ட்', என்ற குழு, இந்த மெட்ராஸ் தினத்தை ஏன் கொண்டாடப்பட வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இது தான் சென்னை

மேலும் பல ஆண்டுகளாக நம்மை அடிமையாக வைத்திருந்த வெள்ளையர்களை நினைவு கொள்ளவா இந்தத் தினத்தை கொண்டாட வேண்டும் என விமர்சித்துள்ளது. இதையடுத்து,சென்னையின் வயது 2000-த்தை கடந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

மதராசபட்டினம்

வரலாற்றுப்படி, 1631ஆம் ஆண்டு, கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸிஸ் டே என்பவர் சோழமண்டலக் கடற்கரை ஓரமாக ஒரு சிறிய இடத்தை வாங்கினார். கடல்சார் வணிகத்திற்காக அந்த இடத்தில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினார்கள். கோட்டையைச் சுற்றி படிப்படியாக விரிவடைந்ததுதான் இன்றைய சென்னை மாநகரம் என்று கூறப்படுகிறது.

பிரான்சிஸிஸ் டே வாங்கிய நிலத்தில் மீனவர்களுக்கு சில பிரச்சினைகள் இருந்தன. அந்தக் கிராமத்தின் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் மதராசன் என்ற ஒருவர். அந்த தலையாரின் மற்றொரு நிலத்தை பிரான்சிஸிஸ் டே வாங்க முற்பட்ட போது, தலையாரி மறுத்துள்ளார்.

பெயர் காரணம்

இதனால் பிரான்சிஸிடே தான் கட்ட உள்ள அந்த நிறுவனத்துக்கு மதராசபட்டினம் என்ற பெயரை சூட்டுவேன் என்று கூறி அந்த நிலத்தை வாங்கியதாக வரலாறு கூறுகிறது. எனவே மதராசபட்டினம் என்ற பெயர் வந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்கிறார்கள்.

மெட்ராஸ் என்ற பெயர் ஆகஸ்ட் 22, 1639 ஆண்டு பிறந்தது என்று சொல்வது வழக்கம். அதாவது அப்போது ஆண்ட வெள்ளையர்கள் காலத்தில் மெட்ராஸ், 'மதராசபட்டினம்' என்ற பெயர் இருந்தது. பின்னர் ஆங்கிலயேர்கள் அந்த பெயரை மாற்றி 'மெட்ராஸ்' என பெயர் சூட்டினர் என்று சொல்லப்படுகிறது.

புனித ஜார்ஜ் கோட்டை

மதராசபட்டினம் என்ற பெயரை எதனால் மாற்றினார்கள் என்பது ஒரு புதிராகவே இருந்த நிலையில், பிறகுதான் தெரிய வந்தது அந்த பெயரை ஆங்கிலயேர்களால் சரியாக உச்சரிக்க முடியவில்லை, ஆகையால் மெட்ராஸ் என சுருக்கமாக மாற்றியுள்ளனர் என்பது.

எப்படி ஏற்றுக்கொவது

இது குறித்து வரலாற்று ஆர்வலர் ஸ்ரீனிவாசன் ரவிச்சந்திரன் நம்மிடம் கூறுகையில், "சென்னையில் கடந்த 15 வருடங்களாக மெட்ராஸ் தினம் என்று ஒரு புது கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு சில பாரம்பரிய ஆர்வலர்களால் ஆரம்பிக்கட்ட இந்த தினம், நாளடைவில் பெரும்பாலான சென்னைவாசிகளின் ஆதரவுடன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மெட்ராஸுக்கு வயது தான் என்ன...

ஊடகங்களிலும் மக்களிடையேயும் இதற்கு ஆதரவு பெருகியது. இதற்கு காரணம் ஆங்கிலயேர்கள் மெட்ராஸ் என்ற நகரத்தை இன்றைய தினத்தில்தான் உருவாக்கினார்கள் என்று சொல்லப்படுகிறது. இதை எப்படி ஏற்றுக்கொவது என்று தெரியவில்லை.

இதற்கு முன்பு மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று மாற்றப்பட்டுள்ளது. அதற்கு முன் சென்னைப்பட்டினம் மதராசபட்டினம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது என்றும் சொல்வதுண்டு” எனக் கூறினார்.

வரலாற்றை தெரிந்து கொண்டாட வேண்டும்

இதையடுத்து, மற்றொரு வரலாறு ஆர்வலர் விக்ரம் வைத்யா கூறுகையில், "எந்த ஒரு கொண்டாட்டத்தையும் வரவேற்க வேண்டும். அதே போல சென்னை தினத்தை நன்றாக கொண்டாட வேண்டும்.

அதை சென்னையுடைய வரலாற்றை தெரிந்து கொண்டு கொண்டாடினால் இன்னும் நன்றாக இருக்கும். கொண்டாட்டங்கள் வெறும் மேம்போக்காக இருக்க கூடாது, ஆழமாக இருக்க வேண்டும்.

உதாரணமாக்க பார்க் ரயில்வே ஸ்டேஷன் என்று சொல்கிறோம். ஆனால் அங்கு பூங்கா இருக்காது. அப்போது ஒரு காலத்தில் அங்கு பூங்கா இருந்திருக்க வேண்டும் என்ற யோசனை வர வேண்டும்" எனக் கூறினார்.

தமிழ் சமூகத்தின் நவீன முதல் படி:

இதனை தொடர்ந்து விண்சென்ட் டி சௌசா, மூத்த பத்திரிக்கையாளர், நம்மிடம் கூறும்போது, "தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் எப்படி கொண்டாடப்படுகிறதோ, அதே போல நாம் சென்னை தினத்தை கொண்டாடுகிறோம்.

மாநகராட்சி

சென்னையில் பல தரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். எனவே நாம் சென்னையை நினைவு கூற வருடத்தில் ஒரு நாளில் இந்த தினத்தை கொண்டாடுகிறோம்.

சென்னை என்று மாறியதற்கு பிறகுதான் தமிழ் சமூகம் நவீன முதல் படிக்கு மாறியது என்பது குறிப்பிடத்தக்கது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரக்‌ஷா பந்தன் பண்டிகையும் கொண்டாடும் காரணமும்

Last Updated : Aug 22, 2021, 8:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.