ETV Bharat / state

தமிழக மருத்துவத் துறையில் காலியாக உள்ள 5000 பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு! - மருத்துவ காலி பணியிடங்கள்

Minister Ma.Subramanian: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் பணியில் காலியாக உள்ள 5000 பணியிடங்கள் இன்னும் 1 மாத காலத்திற்குள் எம்.ஆர்.பி மூலம் நிரப்பப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Minister Ma.Subramanian
அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 9:54 PM IST

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு கையேடு வெளியீட்டு, அதனுடைய வலைதளத்தினையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நவ.17) தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் கூறுகையில், “2023-24 ஆம் ஆண்டில் மருத்துவத்துறையின் மானியக்கோரிக்கையின் போது ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அறிவிக்கப்பட்ட அந்த அறிவிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

அந்தவகையில், அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றாக இந்த அறிவிப்புகளும் செயல்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவத்தின் எதிர்காலம் குறித்த மாநாடு தற்போது நடத்தப்பட இருக்கிறது. இந்தியாவில் மாநில அரசு நடத்தும் சர்வதேச மாநாடாக இது இருக்கும். இதுவரை இந்தியாவில் உள்ள எந்த ஒரு மாநில அரசும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

இம்மாநாடு பலவகைகளில் எதிர்காலத்தில் பரவும் நோய் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அந்த மாநாட்டில் மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு அதிநவீன அமர்வுகள் நடத்தப்பட இருக்கிறது.

தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் தங்களுடைய மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்தும் தெரிவிக்க உள்ளனர். மருத்துவ வல்லுநர்களின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் எதிர்காலத்தில் மருத்துவத்துறைக்கு போதுமான விழிப்புணர்வுகள் கிடைக்கும் என கருதப்படுகிறது.

பல்வேறு மருத்துவத்துறை தொடர்புடைய இடங்களில் இளங்கலை, முதுகலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மருத்துவர்களும் இந்த மாநாட்டில் மற்றும் குழு விவாதங்களில் கலந்து கொண்டு பயனடைய இருக்கின்றனர்.

இந்த மாநாட்டில் கண், காது, மூக்கு தொண்டை, இதய அறிவியல், நீரிழிவு நோய், கண் மருத்துவம், ரோபோடிக் அறுவை, மருத்துவக் கல்வி, சிறுநீரகவியல், தடுப்பூசி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், ஹெபடாலஜி மற்றும் காஸ்ட்ரோஎன்டராலஜி, நரம்பியல், புற்றுநோயியல், செயற்கை நுண்ணறிவு, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், எலும்பியல்,‌ மனநல மருத்துவம், அவசர மருத்துவம், ஆய்வக மருத்துவம் மற்றும் ஜீனோமிக்ஸ், ஆராய்ச்சி மற்றும் தொற்றுநோயியல், பல் மருத்துவம், ஆயுஷ், நர்சிங், மருந்தகம், புனர்வாழ்வு, போன்ற மருத்துவம் சார்ந்த படிப்புகள் ஒவ்வொரு சிறப்பு பிரிவுக்கும் 6 அமர்வுகள் இருக்கும்.

இந்த ஒவ்வொரு 6 அமர்வுகளுக்கும் சர்வதேச அளவில் விரிவுரையாளர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவம் ரீதியான
கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து 23 சர்வதேச வல்லுநர்கள் இதில் பங்கேற்க இருக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவ நிபுணர்கள், அரசுத்துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் இதில் பங்கேற்று எதிர்கால மருத்துவம் குறித்த சிறப்புகளை எடுத்துச் சொல்ல இருக்கின்றனர். இந்த மாநாடு 3 நாட்கள் நடத்தப்பட இருக்கிறது.

தமிழ்நாட்டில் பணிபுரிகின்ற 20,000க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் இதில் பயனடைய இருக்கின்றனர். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக WHO வின் இயக்குநர் டெட்ரோஸ் அழைப்பதற்கான அழைப்பிதழை அனுப்பி இருக்கிறோம்.

அவர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அவர் தலைமையகத்திற்கு இன்னும் வரவில்லை. எனவே அவர் வந்தவுடன் அவரை அழைப்பதற்கும், பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்களும் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொள்வதற்கான விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். இந்த மாநாடு வரும் ஜனவரி 2024 மூன்றாவது வாரத்தில் நடத்தப்பட இருக்கிறது. தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி புதிய மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் ஒரு அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 மருத்துவ இடங்கள் என்கின்ற கட்டுப்பாட்டை அமைத்து புதிய அறிக்கையை வெளியிட்டனர். இந்த அறிக்கையினால் எதிர்காலத்தில் புதிய மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டில் தொடங்குவது தடைப்பட்டு விடும்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவு என்பது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக்கல்லூரி என்பது தான். இதனால் தமிழ்நாட்டில் இன்னும் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். இது குறித்து ஒன்றிய அமைச்சரைச் சந்திக்கும் போதெல்லாம் கோரிக்கையினை வைத்துக் கொண்டிருக்கிறோம்.

தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், மயிலாடுதுறை போன்ற 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது. மேலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய மருத்துவ ஆணையத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையினை எதிர்த்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக்கல்லூரிகள் மற்றும் முதலீடுகள் தமிழ்நாட்டில் முற்றிலும் வராமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் தேசிய மருத்துவ ஆணையம் 15.11.2023 அன்று 10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 மருத்துவ இடங்கள் என்கின்ற நடைமுறையை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கின்றனர். இது தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

இந்த அரசு பொறுப்பேற்றப் பிறகு தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் ரூ.2 கோடி நிதி ஒதுக்கி அதற்கான தலைமை அலுவலகம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய முறை மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

எனவே மருத்துவப்பல்கலைக்கழகம் சென்னை மாதவரம் பகுதியில் உள்ள பால்பண்ணை அருகே 75 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கிறது. எனவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநரால் ஒப்புதல் தரப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது”.

தொடர்ந்து பேசிய அமைச்சர், “தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பணியிடங்கள் அரசு நியமித்துக் கொள்வதற்கு ஏதுவாக மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்டது. இது மட்டுமல்லாமல் பல்வேறு மசோதாக்கள் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எனவே இந்த மசோதாக்களுக்கு அரசு சார்பில் சட்டபூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. நாளை நடைபெறும் சட்டமன்றத்தில் எந்த மாதிரியான தீர்மானங்கள் அனுப்பப்படும் என்பதை சட்டப்பேரவைத் தலைவர் அறிவிப்பார்.

தலசீமியா நோய் பாதிப்புகள் இருக்கின்ற சத்தியமங்கலம், ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு நானே நேரிடையாகச் சென்று அதற்கான மருத்துவ முகாம்களை மலைவாழ் மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 200க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு நேரிடையாக சென்று மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த நோய் பாதிப்பு தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ள வழிகாட்டுதலின் படி மருத்துவக்கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவற்றில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர் பணியிடங்களை நிர்ப்புவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்குகளில் நேற்று (நவ.16) உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அந்த தீர்ப்பினைத் தொடர்ந்து எம்ஆர்பி (MRB) மூலம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக மருத்துவத் துறையில் உள்ள 5000 காலி பணியிடங்கள் 1 மாதத்தில் எம்ஆர்பி மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர் பணி அமர்த்தப்பட உள்ளனர் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்: 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை பணிகள் துவங்கியதாக தமிழக அரசு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.