சென்னை: லண்டனிலிருந்து இன்று 194 பயணிகளுடன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சென்றுகொண்டிருந்தது. இதையடுத்து அங்கு மேசமான வானிலை நிலவுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டதால், விமானம் இன்று (டிசம்பர் 16) காலை 10 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமானிகள் தங்கள் பயண நேரம் முடிந்துவிட்டதாக கூறி, ஓய்வுக்கு சென்றுவிட்டனா். இதையடுத்து உயா் அலுவலர்களின் சிறப்பு அனுமதி பெற்று பயணிகள் அனைவருக்கும் சென்னை விமான நிலையத்திலேயே சுங்கச்சோதனை மற்றும் குடியுரிமை சோதனைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 194 பயணிகளும் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விமானிகள் தங்களுடைய 8 மணி நேரம் ஓய்வை முடித்துவிட்டு வந்த பின்பு, இந்த விமானம் இன்று மாலை மீண்டும் பயணிகளுடன் சென்னையிலிருந்து ஹைதராபாத் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையில் சிறை: மத்திய அமைச்சரிடம் கோரிக்கைவைத்த ஸ்டாலின்!