ETV Bharat / state

வாக்குப்பதிவு தினத்தன்று ஊதியம் பிடித்தால் நடவடிக்கை : தமிழ்நாடு அரசு எச்சரிக்கை - தலைமைச் செயலாளர் சண்முகம் அறிக்கை வெளியீடு

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று நிறுவனங்கள், பணியாளர்களுக்கு விடுமுறை அளித்து ஊதியத்தை பிடித்தம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
author img

By

Published : Dec 26, 2019, 5:28 PM IST

ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று நிறுவனங்கள், பணியாளர்களுக்கு விடுமுறை அளித்து ஊதியத்தை பிடித்தம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சண்முகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். தேர்தல் நடைபெறும் பகுதிகளைச் சேர்ந்த வணிகம், வர்த்தக மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். விடுமுறை அளிப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட ஊழியர் அல்லது பணியாளர்களின் குறிப்பிட்ட அந்த நாளுக்கான ஊதியத்தை பிடித்தம் செய்யாமல் வழங்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வாக்குப்பதிவு தினத்தன்று விடுமுறை அளிக்காமல் இருந்தாலோ அல்லது ஊதியம் அளிக்கப்படாமல் இருந்தாலோ சட்டத்தை மீறியதாக கருதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எப்போது கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை?

Intro:Body:வாக்குப்பதிவு அன்று ஊதியம் பிடித்தால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை

வாக்குப்பதிவு தினத்தன்று ஊதியம் பிடித்தால் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில் வாக்குப்பதிவு தினத்தன்று ஊதியம் பிடித்தால் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் நடைபெறும் பகுதிகளைச் சேர்ந்த வணிகம், வர்த்தக மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விடுமுறை அளிப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட ஊழியர் அல்லது பணியாளர்களின் குறிப்பிட்ட அந்த நாளுக்கான ஊதியத்தை பிடித்தம் செய்யாமல் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு அன்று விடுமுறை அளிக்காமல் இருந்தாலோ அல்லது, ஊதியம் அளிக்கப்படாமல் இருந்தாலோ சட்டத்தை மீறியதாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.