ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு! - சென்னை

சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Local body election
author img

By

Published : Oct 4, 2019, 8:57 PM IST

Updated : Oct 5, 2019, 7:28 AM IST

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களாக செய்துவருகிறது. அதன்படி முதற்கட்டமாக மாநிலத் தேர்தல் அலுவலர், மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணியை மேற்கொள்ள பிடிஓ-வினர் வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர். மேலும் வாக்காளர் பட்டியல் தயார் செய்வது, வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிமுறைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

வாக்காளர் பட்டியல் வெளியீடு
வாக்காளர் பட்டியல் வெளியீடு

இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்களைப் பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் தங்களது பெயர், இருப்பிட முகவரி ஆகியவற்றை சரி பார்த்து திருத்தங்களை செய்துகொள்ள மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல்களின் வரைவுப் பட்டியலை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் "http://www.tnsec.tn.nic.in" என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களின் பெயர், வார்டு, வாக்குச்சாவடி உள்ளிட்ட விவரங்களை பார்த்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: டிக் டாக் பிரபலத்திற்கு சீட் - பாஜகவின் பலே ராஜதந்திரம்!

Intro:Body:

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் தங்களது பெயர், இருப்பிட முகவரி ஆகியவற்றை சரி பார்த்து திருத்தங்களை செய்து கொள்ள மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

Conclusion:
Last Updated : Oct 5, 2019, 7:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.