சென்னை: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 150 நகராட்சிகளில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்தான ஆலோசனை கூட்டத்தை கடந்த வாரம் தேர்தல் ஆணையம் நடத்தியது. அந்த கூட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி துறையினர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து சென்னையில் உள்ளாட்சித் தேர்தலின் போது எந்தவித அசாம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க காவல் உயர் அலுவலர்களுடன் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார்.
வாக்குச்சாவடிகளை வகைப்படுத்தும் பணி
காவல் ஆணையர் அலுவலகத்தின் ஆறாவது மாடியில் தேர்தல் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. துணை ஆணையர் பாலசுப்பிரமணியம் தலைமையில் 25க்கும் மேற்பட்ட காவலர்கள் இந்த தேர்தல் பிரிவில் பணியாற்றவுள்ளனர்.
குறிப்பாக, சென்னையில் 5,750 வாக்குசாவடிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், மிக பதற்றமான மற்றும் பதற்றமான வாக்குசாவடிகள் எவை என்பதை கண்டறியும் பணிகளில், தேர்தல் பிரிவு காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பிரிவு காவலர்கள் திட்டம்
மேலும் அசாம்பாவிதம் ஏற்படக்கூடிய வாக்குசாவடிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கும் பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்திய உடன் தேர்தல் அலுவலர்களுடன் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபடுவது எப்படி என்பது குறித்தும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலின் போது வாக்குசாவடிகளில் எவ்வளவு காவலர்கள் பணியில் ஈடுபட வேண்டும் என தேர்தல் பிரிவு காவலர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Maanaadu Release: தடைகள் தகர்ந்தது ; திட்டமிட்டபடி திரைக்கு வரும் 'மாநாடு'