ETV Bharat / state

அம்பத்தூர் டாஸ்மாக் குடோனிலிருந்து மதுபாட்டில்கள் கொள்ளை! - டாஸ்மாக் குடோனிலிருந்து மதுபாட்டில்கள் கொள்ளை!

சென்னை: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்த மதுபாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.

Liquor Bottles has been theft from Ambattur Gudown

author img

By

Published : Apr 8, 2020, 3:00 PM IST

கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் கடைகள்கூட பல்வேறு கட்டுப்பாடுகளுடன்தான் இயங்கிவருகின்றன. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் குடோனில் 146 மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரியில் இருந்த மது பாட்டில்கள் அனைத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று இரவு கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

டாஸ்மாக் குடோனிலிருந்து மதுபாட்டில்கள் கொள்ளை!

இச்சம்பவம் குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கொள்ளை அடிக்கப்பட்ட மதுபாட்டில்கள் அனைத்தும் கடந்த 25ஆம் தேதி செங்கல்பட்டில் உள்ள மது ஆலையில் இருந்து கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காரில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.