ETV Bharat / state

'மாணவர்களின் அறிவை மேலும் மேம்படுத்த பள்ளிகளில் நூலகம்!' - Chennai

சென்னை: ஒவ்வொரு அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தது ஆயிரம் புத்தகங்களுடன் பள்ளி நூலகம் செயல்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

library
author img

By

Published : Jul 30, 2019, 8:35 AM IST

Updated : Jul 30, 2019, 11:58 AM IST

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

  • மாணவர்கள் தொடர்ந்து படித்துக்-கொண்டேயிருந்தால் அவர்களின் அறிவு வளரும். கால சூழ்நிலைக்கேற்ப கல்வி நிலை மாற்றம்பெறுகின்றது. எனவே மாணவர்கள் பாடப் புத்தகம் மட்டுமல்லாமல் பாடத்துடன் தொடர்புடைய புத்தகங்களை படிக்கும்போது குழந்தையின் அறிவு பெருகும் என்பதால் பள்ளியில் நூலகம் அமைத்து மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த வேண்டியது அவசியம்.
  • பள்ளிக் கல்வித் துறையில் செயல்பட்டுவரும் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பெரும்பாலானவற்றில் ஏற்கனவே நூலகம் பயன்பாட்டில் உள்ளது. நூலகம் இல்லாத பள்ளிகளில் ஒரு அறையை நூலகமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் குறைந்தது ஆயிரம் புத்தகங்களுடன் பள்ளி நூலகம் செயல்பட வேண்டும்.
  • இந்த நூலகத்திற்கு தினமும் குறைந்தபட்சம் தமிழ், ஆங்கில தினசரி செய்தித்தாள் ஒன்று வாங்கி மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.
  • நூலகப் பணியினை மேற்கொள்ள ஒரு ஆசிரியரை நியமித்து மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்தும் திறனை அதிகரிக்கலாம்.
  • மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்துவதால் அவர்களின் வாசிக்கும் திறன், பேச்சுத்திறன், எழுத்துத்திறன், ஆங்கிலம் பேசும் திறன் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகும். பள்ளிகளில் கூடுதலாக உள்ள நாற்காலி, மேஜையை பள்ளி நூலகத்திற்குப் பயன்படுத்தலாம்.
  • மாணவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் படிக்கும் வாய்ப்பினை அளித்து அவர்களின் பேச்சுத்திறன், எழுத்துத்திறன் போன்ற திறமைகளை வளர்த்து அறிவுக்கூர்மை மேம்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Intro:அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளில்
ஆயிரம் புத்தகங்களுடன் நூலகம்

Body:சென்னை,
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, மாணவர்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தால் அவர்களின் அறிவு வளரும் கால சூழ்நிலைக்கேற்ப கல்வி நிலை மாற்றம் பெறுகின்றது. எனவே மாணவர்கள் பாட புத்தகம் மட்டுமல்லாமல் பாடத்துடன் தொடர்புடைய புத்தகங்களை படிக்கும் பொழுது குழந்தையின் அறிவு பெருகும் என்பதால் பள்ளியில் நூலகம் அமைத்து மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வேண்டியது அவசியம்.
பள்ளிக் கல்வித் துறையில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பெரும்பாலானவற்றில் ஏற்கனவே நூலகம் பயன்பாட்டில் உள்ளது. நூலகம் இல்லாத பள்ளிகளில் ஒரு அறையை நூலகமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு அரசு அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் குறைந்தது ஆயிரம் புத்தகங்களுடன் பள்ளி நூலகம் செயல்பட வேண்டும்.

இந்த நூலகத்திற்கு தினமும் குறைந்தபட்சம் தமிழ் மற்றும் ஆங்கில தினசரி செய்தித்தாள் ஒன்று வாங்கி மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.

நூலக பணியினை மேற்கொள்ள ஒரு ஆசிரியரை நியமித்து மாணவர்களும் நூலகத்தை பயன்படுத்தும் திறனை அதிகரிக்கலாம்.

மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்துவதால் அவர்களின் வாசிக்கும் திறன், பேச்சுத்திறன், எழுத்துத்திறன், ஆங்கிலம் பேசும் திறன் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகும் பள்ளிகளில் கூடுதலாக உள்ள நாற்காலி மற்றும் மேஜையை பள்ளி நூலகத்திற்கு பயன்படுத்தலாம்.
மாணவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் படிக்கும் வாய்ப்பினை அளித்து அவர்களின் பேச்சுத்திறன், எழுத்துத்திறன் போன்ற திறமைகளை வளர்த்து அறிவுக்கூர்மை மேம்படுத்திட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
Conclusion:
Last Updated : Jul 30, 2019, 11:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.