ETV Bharat / state

'கர்ப்பிணினு கூட பாக்காம ரூம்ல லாக் பண்ணி அடிச்சாங்க' பெண் வழக்கறிஞருக்கு நேர்ந்த சோகம் - ரூம்ல லாக் பண்ணி அடிச்சாங்க

பூவிருந்தவல்லியில் கர்ப்பிணி பெண் வழக்கறிஞரை தாக்கியவர்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வழக்கறிஞர்கள் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

கர்ப்பிணி பெண் வழக்கறிஞரை தாக்குதல்
கர்ப்பிணி பெண் வழக்கறிஞரை தாக்குதல்
author img

By

Published : May 21, 2023, 10:37 PM IST

சென்னை: பூவிருந்தவல்லியில் கர்ப்பிணி பெண் வழக்கறிஞரை தாக்கியவர்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வழக்கறிஞர்கள் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2 மணி நேரம் காவல் நிலைய வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கர்ப்பிணி பெண்ணை சமாதானம் செய்ய காவல் ஆய்வாளர் என காவல் நிலையத்திலிருந்து யாரும் முன் வரவில்லை.

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் பெண் வழக்கறிஞர் சவிதா. இவர் நேற்று சக வழக்கறிஞர்களுடன், வழக்கு தொடர்பாக சென்னிர்குப்பத்தில் உள்ள அர்ச்சனா என்பவரது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு திடீரென்று வழக்கு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த 8-க்கும் மேற்பட்டோர் ஆண்கள் வழக்கறிஞர் சவிதாவை கர்ப்பிணி என்றும் பாராமல் கடுமையாக தாக்கியுள்ளனர். சவிதா உட்பட அவருடன் சென்ற சக வழக்கறிஞர்களையும் அங்கிருந்த 8 பேர் தாக்கியதாக சவிதா குற்றம் சாட்டுகிறார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சவிதா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற பின், பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த புகார் மீது காவல்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என சவிதா தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. அதேபோல், புகாருக்கான சிஎஸ்ஆரும் காவல்துறையினர் வழங்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தில் பூவிருந்தவல்லி காவல்துறையினர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் சவிதா கூறுகையில், “கர்ப்பிணி என்றும் பாராமல் 8 பேர் என்னையும் என் கூடே இருந்தவர்களையும் கதவை தாழ்ப்பாலிட்டு கடுமையாக தாக்கினார்கள். மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் என்னை அடித்து சித்திரவதைப் படுத்தினார்கள். அந்த 8 பேரின் பெயர்க்கூட எனக்கு தெரியாது; சிகிச்சைக்கு பிறகு புகார் கொடுக்க வந்தேன்.

ஆனால், என் புகாரை எடுத்துக்கொள்ள காவல்துறை மறுத்தனர். ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார்கள். சட்டம் படித்த வழக்கறிஞரான எனக்கே, இந்த நிலைமை என்றால் பாமரர்கள், சாமனிய மக்களின் நிலை என்னவாக இருக்கும். வழக்கை வாப்பஸ் வாங்க சொல்லி காவலர்களே மிரட்டுவது கூடுதல் வருத்தம் அளிக்கிறது. ஆய்வாளர் க்ளாட்சன் டேவிட் தன் மீதும் FIR பதிவு செய்வதாக மிரட்டுகிறார்.

காவல் ஆய்வாளர், சார்பு காவல்துறை ஆய்வாளர் என காவல் நிலையத்தில் இருந்த யாரும் என்ன.. ஏதென்று கூட கேட்கவில்லை. இன்னும் ஏன், அங்கிருந்த பெண் காவலர்கள் கூட யாரும் வாய் திறந்து கேட்க முன்வரவில்லை என வருந்தினார். என் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் முதலமைச்சர் மற்றும் மனித உரிமை கமிஷனிடம் மனு கொடுப்பேன். திமுக அரசு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. நாட்டில் இப்படித்தான் நடக்கிறதா? பிறர் சொல்லும் போது தெரியவில்லை; எனக்கு அது நிகழும் போதுதான், அந்த வேதனை புரிகிறது” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

முன்னதாக என்ன நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சும்மா என்ன, இங்க உட்க்கார வச்சுருக்காங்க, வாழனுமா, சாகனுமா? என அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், எந்த நிலை வந்தாலும் நியாயம் கிடைக்காத வரை நான் போராட்டத்தை கைவிடப் போவதில்லை” என உறுதியாகக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, தன்னையும் தன் தாயை தாக்கியவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீதும், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் காவல் நிலைய வாயலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கர்ப்பிணி பெண்ணை சமாதானம் செய்ய ஆய்வாளர் முன் வராதது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நெல்லையில் தலைவிரித்தாடிய திமுக உட்கட்சிப் பூசல்; அதிரடி நடவடிக்கை எடுத்த கட்சித் தலைமை - முழுப் பின்னணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.