ETV Bharat / state

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் செயலாக்கங்கள் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பு- ஆளுநர் ஆர்.என்.ரவி - இந்திய விடுதலைக்காக அர்ப்பணித்தவர் வ உ சி

நமது நாட்டு இளைஞர்களுக்கு வ.உ.சிதம்பரம் பிள்ளையின் செயலாக்கங்கள் தொடர்ந்து ஊக்கம் அளிப்பனவாக உள்ளது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் செயலாக்கங்கள் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பு- ஆளுநர் ஆர்.என்.ரவி

author img

By

Published : Sep 4, 2022, 4:13 PM IST

சென்னை: வ.உ. சிதம்பரனாரின் 151வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள செய்தியில், வ.உ.சிதம்பரம் பிள்ளை தனது வாழ்வை இந்திய விடுதலைக்காக அர்ப்பணித்து, மகத்தான தியாகங்களைச் செய்தவர். தற்சார்பு பெற்ற சுதந்திர இந்தியாவுக்காக அவர் பாடுபட்டவர்.

வணிகப் போக்குவரத்தில் ஆங்கிலேயர்களின் ஏகபோக உரிமையை முறியடிக்க முதல் உள்நாட்டு நீராவிக் கப்பல் நிறுவனத்தை நிறுவினார். வங்காளத்தைப் பிரிப்பதன் மூலம் இந்தியச் சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் ஆங்கிலேயர்களின் கொள்கைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக மாபெரும் மக்கள் இயக்கத்தை அணி திரட்டினார். அதற்காக, கடுமையான சிறைவாசம் அனுபவித்தார்.

வ.உ.சி. ஒரு புலமை வாய்ந்த அறிஞராகவும் இருந்தார். நமது சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாக் காலத்தில் தற்சார்பு பாரதம் எனும் சுயச்சார்பின் மூலம் ஒரே பாரதம், உன்னத பாரதம் உருவாகிட நமது நாட்டு இளைஞர்களுக்கு வ.உ.சிதம்பரம் பிள்ளையின் செயலாக்கங்கள் தொடர்ந்து ஊக்கம் அளிப்பனவாக உள்ளன. இந்த மகத்தான தலைவருக்கு தேசம் இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறது என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:"2,000 ஆண்டுகளாக போராடி பெற்ற வெற்றி மீண்டும் தீண்டாமை எனும் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.