ETV Bharat / state

எங்களுக்கு தகுந்த இடைவெளியா? - நெவர்... காசிமேட்டில் குவிந்த மீன் பிரியர்கள்!

author img

By

Published : Jul 25, 2020, 5:48 PM IST

சென்னை: நாளை (ஜூலை 26) முழு ஊரடங்கு என்பதால் காசிமேட்டில் மீன் வாங்க அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

மீன்
மீன்

சென்னை காசிமேடு துறைமுகம் மீன் விற்பனைக்குப் பெயர்போனது. ஆனால் ஊரடங்கு காரணமாக அங்கு மீன் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டது. சென்னையின் ஹாட்ஸ்பாட் என சொல்லக் கூடிய ராயபுரம், தண்டையார்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட இடங்களில் கரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனையை மீன்வளத் துறை அனுமதித்தது. ஆனால், காசிமேட்டில் கடந்த வாரம் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல் மீன் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஜூலை 20ஆம் தேதி அன்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மாநகராட்சியில் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், காலை 3 மணிமுதல் 8 மணிவரை மட்டுமே மீன் வியாபாரம் செய்யப்படும் என மீன்வளத் துறை உத்தரவிட்டிருந்தது.

அதிகாலை வேளையில் மீன் வாங்க வருவோருக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்திருந்தது. இந்த விதிமுறைகளைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அதிகாலை முதலே மீன் வாங்குவதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்தனர். மீன் கொள்முதலுக்கு மட்டுமே அனுமதி என அரசு தெரிவித்திருந்த நிலையில், மீன் உண்ணும் ஆசையில் காசிமேடு துறைமுகத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இது சமூகப் பரவலுக்கு வழிவகுக்கலாம் என சமூகச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கரோனாவும் மீனும்!

அசைவத்தின் மீதான பிரியம் மக்களைக் கரோனா அச்சத்திலிருந்து மீட்டெடுத்துள்ளது. இதனால்தான் காசிமேட்டில் அதிகாலை 3 மணிக்குக்கூட மீன் விற்பனை ஜோராக நடைபெற்றது. தகுந்த இடைவெளியைப் பின்பற்ற மக்களும் முற்றிலும் மறந்துவிட்டனர். இந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காகக் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுப்பட்டனர். ஒலிப்பெருக்கி மூலம் கரோனா குறித்த விழிப்புணர்வை எடுத்துரைத்தனர்; ஆனால், அங்கு மக்களிடையே கரோனா முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு பெயரளவில்தான் காணப்பட்டது.

கரோனா பரிசோதனை

மீன் வாங்க வருவோரால் கரோனா பரவக் கூடாது என்பதில் அரசு முழுக் கவனம் செலுத்திவருகிறது. இதனால், துறைமுகத்துக்கு வருவதற்கு முன்பாக நுழைவுவாயிலில் மாநகராட்சி சார்பாக அமைத்துள்ள மருத்துவ முகாமில் பரிசோதனை செய்த பிறகே மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இந்தப் பரிசோதனையில் மிதமான கரோனா அறிகுறிகள் இருந்தால்கூட சற்றும் தாமதிக்காமல் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

காசிமேட்டில் குவிந்த மீன் பிரியர்கள்!

இன்று (ஜூலை 25) அதிகாலை 3 மணி முதல் 9 மணி வரை கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீன்களும், மீனவர்களும் கிசுகிசுக்க மக்களுடனான பேரத்துடன் பரபரப்பாக இருக்கும் காசிமேடு துறைமுகம் காலை 9 மணிக்கு மேல் ஆள் அரவமின்றி வெறிச்சோடியது.

இதையும் படிங்க: மீன்கள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.