ETV Bharat / state

விஜய் அருமையான வார்த்தைகளை உபயோகித்துள்ளார்: கே.எஸ். அழகிரி

author img

By

Published : Sep 20, 2019, 5:24 PM IST

சென்னை: சுபஸ்ரீ மரணம் குறித்து நடிகர் விஜய் பேசியது வரவேற்கத்தக்கது. அவர் அருமையான வார்த்தைகளை உபயோகித்துள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

ks alagiri

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள செயற்குழு கூட்டம் மற்றும் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத், மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சி ராணி, சிரிவில்ல பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டம் என்பது இந்தியாவில் பாஜக கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள பேரழிவுகளுக்கு கிரீடமாக அமைந்துள்ளது. லாரி ஓட்டுனர் போன்றவர்களிடம் ஆலோசித்து திருத்தம் கொண்டு வர வேண்டும்.

கேஎஸ் அழகிரி செய்தியாளர் சந்திப்பு

சுபஸ்ரீ மரணத்தில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் பேசிய கருத்து வரவேற்கத்தக்கது. அவர் மிகவும் அருமையான வார்த்தைகள் உபயோகித்து பேசியுள்ளார்.

குட்கா, போதை பொருட்கள் விஷயங்கள் அனைத்தும் சமூகம் சார்ந்த பிரச்னைகள். அதில் அரசியல் பார்க்கக்கூடாது. தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் உள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. அதோடு தமிழ்நாடு அரசு இதில் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தேவைப்பட்டால் அதற்காக நாங்கள் போராடுவோம்’ என்றார்.

இது தொடர்பாக படிக்க: #BigilAudioLaunch: 'வாழ்க்கையில் நீங்க நீங்களா இருங்க'- 'பிகில்' விஜய்யின் அட்வைஸ்!

Intro:Body:தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள செயற்குழு கூட்டம் மற்றும் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத்,
மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சி ராணி, சிரிவில்ல பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டம் என்பது இந்தியாவில் பிஜேபியால் கொண்டுவரப்பட்டுள்ள பேரழிவுகளுக்கு கிரீடமாக அமைந்துள்ளது. லாரி ஓட்டுனர் போன்றவர்களிடம் ஆலோசித்து திருத்தம் கொண்டு வர வேண்டும் என கூறினார்.

சுபஸ்ரீ மரணத்தில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் பேசிய கருத்து வரவேற்க தக்கது. அவர் மிகவும் அருமையான வார்த்தைகள் உபயோகித்து பேசியுள்ளார். அவர் அரசியல் வருகை பற்றிய கேள்விக்கு, வரட்டும் அப்போது பார்த்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

குட்கா, போதை பொருட்கள் விஷயங்கள் அனைத்தும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள். அதில் அரசியல் பார்க்கக்கூடாது. தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் உள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது. அதோடு தமிழ்நாடு அரசு இதில் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம். தேவைப்பட்டால் அதற்கான நாங்கள் போராடுவோம் என கூறினார்.

சிதம்பரம் கைதுக்கு நானே கைது ஆனேன். மேலும் போராட்டம் என்றால் பஸ்களை எரிப்பதோ, கடை அடைப்போ அல்ல. சிதம்பரம் எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற நோக்கத்தை மக்களிடம் எடுத்து செல்வதுதான் தவிர பஸ்சை எரிப்பது அல்ல என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை திமுக திரும்பப்பெற்றது வரவேற்க தக்க நிலைப்பாடு ஆகும் என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.