ETV Bharat / state

குடிபோதை தகராறு; இளைஞர் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொலை செய்த இருவர் கைது! - இளைஞர் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொலை

சென்னை கொடுங்கையூரில் குடிபோதை தகராறில் இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளைஞர் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொலை செய்த இருவர் கைது

author img

By

Published : Aug 7, 2023, 1:18 PM IST

சென்னை: புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 27). சென்ட்ரிங் (Centring) வேலை செய்து வந்தார். நேற்று (ஆகஸ்ட் 6ஆம் தேதி) ஞாயிற்றுக் கிழமை என்பதால் கொருக்குப்பேட்டையில் உள்ள அவரது நண்பர் குமார் வீட்டிற்கு சென்று உள்ளார். அங்கு நண்பர்கள் அனைவரும் மது அருந்தி உள்ளனர். அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு நள்ளிரவு கோபி வீட்டிற்கு வர முடியாமல் தள்ளாடிக்கொண்டே கொடுங்கையூர் பகுதி வழியாக வந்துள்ளார்.

அப்போது கொடுங்கையூர் ஆர்.ஆர் நகர் மெயின் தெரு அருகே கோபி வரும் போது அங்கு இருந்த கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்த ஜான்சன் என்ற கருப்பு (வயது 24) மற்றும் கொடுங்கையூர் ஆர்.ஆர் நகரை சேர்ந்த சிவா (வயது 55) ஆகிய இருவரும் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது சிவா, கோபியை பார்த்து பீடி உள்ளதா என கேட்டு உள்ளார். அதற்கு முழு மது போதையில் இருந்த கோபி யாரிடம் பீடி கேட்கிறாய் என சிவாவிடம் தகராறு செய்து சிவாவை தாக்கி உள்ளார்.

இதனால் கோபம் அடைந்த சிவா மற்றும் ஜான்சன் ஆகிய இருவரும் சேர்ந்து கோபியை சரமாரியாக தாக்கி உள்ளனர். அப்பொழுது கோபி, ஜான்சன் மற்றும் சிவாவை தகாத வார்த்தைகளால் திட்டி அடிக்க வந்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் கோபியை அடித்து கீழே தள்ளிய ஜான்சன் மற்றும் சிவா அருகில் இருந்த ஆட்டுக்கல்லை எடுத்து கோபி தலையில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர்.

கோபியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இது குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதனை தொடர்ந்து தலை நசுங்கி இருந்த கோபியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று இரவு கஞ்சா போதையில் அதே பகுதியில் சுற்றித்திரிந்த ஜான்சன் என்ற கருப்பு மற்றும் சிவா ஆகிய இருவரையும் கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜான்சன் மற்றும் சிவா மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், நேற்று இரவு இருவரும் கஞ்சா போதையில் இருந்ததும் முழு குடிபோதையில் வந்த கோபியிடம் தகராறு செய்யும் போது மூன்று பேரும் போதையில் இருந்ததால் இந்த கொலை நடந்ததாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொடுங்கையூர் போலீசார் மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குழந்தையுடன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்.. 8 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.