சென்னை: மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிராமோத்யோக் பவனுக்குச்சென்று, மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு காதி விற்பனையைத் தொடங்கி வைத்து, சில பொருட்களை கொள்முதல் செய்தார்.
பின்னர் பேசிய ஆளுநர் ஆர். என்.ரவி, 'மகாத்மா காந்தி மனித குலத்திற்கும், குறிப்பாக விளிம்புநிலை பட்டியலின சமூகத்தினரின் மீதும் தொலைநோக்கு பார்வை கொண்டவராக இருந்தார். சமூக நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு காந்தியின் போதனைகள் மற்றும் சித்தாந்தங்கள் அமைந்ததையும் ஆளுநர் நினைவு கூர்ந்தார்.
மகாத்மா காந்தி முன்பைவிட இன்று தேசத்திற்குத் தேவையாக இருக்கிறார். இரக்கம், அகிம்சை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சகவாழ்வு ஆகியவை இன்று மிகவும் பொருத்தமானவை.
காதி தயாரிப்புகள் தன்னம்பிக்கையின் அடையாளமாகவும், உலகிற்கு இந்தியாவின் முத்திரையாகவும் இருக்கிறது. பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் காதிப்பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்' என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிராமப்புறப்பொருளாதாரம் மற்றும் சிறு,குறு தொழில்துறை குறிப்பாக நெசவாளர்களை வலுப்படுத்தும். காதி தயாரிப்புகளை நாடு மற்றும் உலகின் அனைத்து மூலைகளுக்கும் எடுத்துச்செல்ல, நூற்பு மற்றும் தயாரிப்புகளின் வடிவமைப்பு குறித்தும், புதுமையான யோசனைகள், தொழில் நுட்பங்களைக் காதி கிராமோத்யோக் பவன் அலுவலர்கள் கொண்டு வர வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்ய முடியாது - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்