ETV Bharat / state

முதல் நாளே பயமா? - அதிமுக அரசை விமர்சித்த கனிமொழி!

சென்னை: அதிமுக அரசுக்கு திமுகவின் பரப்புரையின் முதல் நாளே பயம் தொற்றிவிட்டது என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து அக்கட்சியின் மகளிரணிச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.

  முதல் நாளே பயமா? அதிமுக அரசை விமர்சித்த கனிமொழி!

author img

By

Published : Nov 20, 2020, 7:14 PM IST

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்குத் தயாராகும் வகையில், ‘தமிழகம் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்று திமுக தேர்தல் பரப்புரைப் பயணத்தை அறிவித்தது. அதன் முதல் கட்டமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி பிறந்த நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையிலிருந்து தடையை மீறி தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்கினார்.

தேர்தல் பரப்புரையை தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அவரை காவல் துறையினர் கைதுசெய்தனர். கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க அரசியல் கூட்டங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் கைதுக்கு கண்டனம் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் திமுக மகளிர் அணிச் செயலாளரும், அக்கட்சியின் எம்பியுமான கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.

அதில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஆனால் திமுக தலைவர்கள் எங்கும் செல்லக்கூடாது. அடிமை அதிமுக அரசுக்கு திமுகவின் பரப்புரையின் முதல் நாளே பயம் தொற்றிவிட்டது.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி கைதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவருடைய பரப்புரை பயணம் தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி கைதுசெய்யப்பட்டு ஒரு மணி நேரத்தில் விடுதலைசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.