சென்னை: வானவில் அறக்கட்டளை ப்ராக்சிஸுடன் இணைந்து, சமூகச் செயல்பாட்டுக்கான ஆராய்ச்சி நிறுவனம் (ROSA) மற்றும் நாடோடி இனத்தவர் பழங்குடிகள் தன்மேம்பாட்டு மையம் (TENT) ஆகியோரின் ஆதரவுடன் தமிழ்நாட்டில் உள்ள எட்டு மாவட்டங்களில் நரிக்குறவர், பூம்பூம் மாட்டுக்காரர், ஆதியன், லம்படா, காட்டுநாயக்கர் ஆகிய நான்கு நாடோடிப் பழங்குடியினரிடையே விரிவான பங்கேற்பு ஆராய்ச்சி மேற்கொண்டு அந்த அறிக்கையை இன்று கனிமொழி எம்.பி தலைமையில் வெளியிடப்பட்டது.
பழங்குடி இனத்தவர் கல்வி நிலை: இந்த ஆய்வில் பங்கேற்ற குடும்பங்களின் கல்வி நிலை, விழாவில் பங்கேற்ற 1485 குடும்பங்களில், 1118இல் யாரும் 10வது முடிக்கவில்லை. 1275இல் யாரும் 12வது முடிக்கவில்லை, 1378இல் ஒருவரும் கல்லூரி முடிக்கவில்லை. சாதிச் சான்றிதழ்கள் இல்லாதது, பள்ளிகள் அருகில் இல்லாதது, பல்வேறு பாகுபாடுகள் காட்டப்படுவது, பிற சமூகங்களைச் சேர்ந்த சக மாணவர்கள் நட்பாக மறுப்பது சமூகத்தின் பார்வை, குடும்பப் பணிகளில் ஈடுபடுவது, குடும்பத்தினரை கவனித்துக்கொள்ளும் பொறுப்புகள், குழந்தைத் திருமணங்கள் என் நாடோடிப் பழங்குடியின குழந்தைகள் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்கிறார்கள் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விழாவில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் க.கனிமொழி "தற்போதைய சூழலில் இந்த ஆய்வு அறிக்கை மிக முக்கியமானதாக இருக்கிறது.நாடோடிகளாக அறிவிக்கப்ட்ட பழங்குடியினர், மக்களின் பார்வையில் மறைந்து போகிறார்கள்,அவர்களை நாம் தினமும் கடந்து செல்கிறோம், ஆனால் சமூகத்தின் பார்வை அவர்கள் மேல் படமால் தான் இருக்கிறது.
மேலும், அரசியல் சமூகத்தின் குரலாக அவர்கள் இருக்க வேண்டும். என்றார்,இதைத் தொடர்ந்து பேசிய அவர், தற்போது, இருக்கும் தமிழ்நாட்டில், இவர்களுக்கு ஜாதி சான்றிதழ் பெறுவது பெரும் கஷ்டமாக இருக்கிறது. ஏன் என்னுடைய தொகுதியில், காட்டுநாயக்கர் என்ற சமூக மக்களுக்கு நிலையான ஜாதி சான்றிதழ் பெற முடியவில்லை. அவர்கள் ஒரு இடத்தில், பழங்குடியினர் என்றும், மற்றோறு இடத்தில், மற்றோறு பிரிவரினர் என்று தான் பெற முடிகிறது. மேலும் அவர்களின் கல்வி நிலையை மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இங்கு வெளிடயிட்ட ஆய்வு அறிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்வேன். பழங்குடியினர் குரலாக என் குரல் இந்திய பாராளாமன்றத்தில் ஒலிக்கும். ஆனால் தற்போது இந்தியாவை இந்தியா என்று கூறுவதா இல்லை வேறு என்ன பெயரில் கூறுவது என்ற குழப்பம் இருந்துக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வானவில் அறக்கட்டளையின் நிறுவனர் ரேவதி, ஆராய்ச்சியாளர் வர்தினி, ஆதியன் பழங்குடியினர் கூட்டமைப்பின் தலைவர் கே.வீரய்யன், முன்னாள் அரசு அதிகாரி, கிறிஸ்தோதாஸ் காந்தி,ஆவனப்பட இயக்குநர் தக்ஷின் பஜ்ரங்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க : "அருந்ததியினப் பெண் சமைத்தால் சாப்பிட மாட்டோம்".. வம்பு செய்த நபருக்கு ஆப்பு வைத்த ஆட்சியர்.. கரூரில் நடந்தது என்ன?