ETV Bharat / state

காவல் துறை வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்: கனிமொழி எம்.பி

author img

By

Published : Jun 23, 2021, 3:59 PM IST

சென்னை: காவல் துறை வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நடப்பது திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

காவல்துறை வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அடுத்த இடையப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகேசன்(40). இவர், இடையபட்டி- வாழப்பாடி பிரிவு சாலையில், மளிகைக் நடத்தி வந்தார். இந்த நிலையில், முருகேசன் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் நேற்று ( ஜுன்.22) காலை வெள்ளிமலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்க சென்றுள்ளார்.

மது அருந்திவிட்டு நண்பர்களுடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச் சாவடி அருகே பாதுகாப்பு பணி மேற்கொண்டிருந்த காவல் துறையினர், தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த காவல் துறையினர், முருகேசனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகேசன், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று (ஜுன்.23) சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார்.

இது குறித்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, "சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7-க்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும். நடப்பது திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: போலீஸ் தாக்குதலில் வியாபாரி உயிரிழப்பு - சிறப்பு எஸ்ஐ கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.