சாத்தான்குளத்தில் வணிகர்கள் காவல் துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்தச்சூழ்நிலையில், 'சாத்தான்குளம் சம்பவம் லாக்-அப் டெத் இல்லை' என்று கடம்பூர் ராஜூ ஊடகங்களுக்குப் பேட்டியளித்திருந்தார். இந்தப் பேட்டியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் மூச்சுத்திணறலாலும், உடல்நலக் குறைவாலும் உயிரிழந்தனர் என்று முதலமைச்சர் கூறினார். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் இது லாக்-அப் மரணம் கிடையாது என்று கூறுகிறார்.
-
அரசிடமிருந்து, கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நமக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்? முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை காப்பாற்றுவதற்கு முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
2/2
">அரசிடமிருந்து, கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நமக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்? முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை காப்பாற்றுவதற்கு முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 28, 2020
2/2அரசிடமிருந்து, கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நமக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்? முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை காப்பாற்றுவதற்கு முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 28, 2020
2/2
இந்த அரசிடமிருந்து, கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நமக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்? முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையை, அவர் காப்பாற்றுவதற்கு முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'சாத்தான்குளம் சம்பவம் நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழலாம்' - கமல்ஹாசன்