கரோனா ஊரடங்கைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடத்தப்பட்டு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. ஆராய்ச்சி, தொழில்நுட்பம் படிக்கும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களின் வேலைவாய்ப்பைக் கருத்தில்கொண்டு, முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் எட்டு மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன.
அரசு உத்தரவின்படி, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் இறுதியாண்டு இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி மாணவர்களுக்காக கல்லூரிகள், விடுதிகள் டிசம்பர் 7ஆம் தேதிமுதல் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை புறநகர் ரயிலில் அத்தியாவசிய பணியாளர்கள் அல்லாத பெண்கள் பயணிக்க நவம்பர மாதம் 23ஆம் தேதி அனுமதியளித்தது. அதேபோல் மாணவர்களுக்கும் அனுமதியளிக்க வேண்டும் எனப் பலதரப்பினரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
-
இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 9, 2020இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 9, 2020
தற்போது இது குறித்து கமல்ஹாசன், "இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்துசெல்ல நம்பியிருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.