தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல்.06) காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக தேனாம்பேட்டையில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தனது மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசனுடன் சென்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
இந்நிலையில், தான் வாக்களித்தது குறித்து ”மக்கள் தீவிரமாக வாக்களித்து வருகிறார்கள் என்பதில் பெருமகிழ்ச்சி. ஜனநாயகக் கடமையை குடும்பத்துடன் நிறைவேற்றிவிட்டு கோவைக்கு வந்துவிட்டேன். கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானாக வந்தடையும். செய்யுங்கள்” என ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜக பணம் பட்டுவாடா... வேட்பாளர்கள் போராட்டம்