ETV Bharat / state

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளரின் ஜாமீன் மனு குறித்து பரிசீலனை செய்யப்படும்.. உயர் நீதிமன்றம் - HC Plea

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்குத்தொடர்பாக காவல்துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதைப் பொறுத்து, பள்ளி தாளாளரின் ஜாமீன் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: பள்ளி தாளாளரின் ஜாமீன் மனு குறித்து பரிசீலனை செய்யப்படும் - சென்னை உயர் நீதிமன்றம்

author img

By

Published : Aug 17, 2022, 5:57 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில், அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் மூன்றாவது குற்றம்சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்பட்டு, ஜூலை 17ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் தமக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனு அளித்திருந்தார்.

இம்மனு மீதான விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வந்தபோது, மாணவி தற்கொலை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அவரது ஜாமீன் மனுவை விசாரிக்கக்கூடாது என சிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் பள்ளியின் தாளாளர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். இந்த மனுவில், “மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதைக்காரணம் காட்டி, எனது ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைக்காமல் எனது மனுவை விசாரிக்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி மரணம் தொடர்பாக தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி விசாரணைக்கு வருவதால், ஜாமீன் மனுவை விசாரிக்க உத்தரவிடக் கூடாது என சிபிசிஐடி சார்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாணவி மரணம் தொடர்பாக ஆகஸ்ட் 29ஆம் தேதி காவல் துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதைப் பொறுத்து, ரவிக்குமார் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி விசாரணையை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கலவரம்: 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.