ETV Bharat / state

தமிழ்நாட்டிற்கு ஜுன் மாதம் 42,58, 760 தடுப்பூசிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாட்டிற்கு ஜுன் மாதத்தில் 42 லட்சத்து 58 ஆயிரத்து 760 கரோனா தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

vaccine
தடுப்பூசி
author img

By

Published : Jun 8, 2021, 1:18 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், பல இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜுலை 2 ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு வரும் தடுப்பூசியின் அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஜூன் 3ஆம் தேதி முதல் ஜூலை 2 ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு 42 லட்சத்து 58 ஆயிரத்து 760 கரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 முதல் 44 வயதினற்கு கோவிஷூல்டு தடுப்பூசிகள் 13 லட்சத்து 43 ஆயிரத்து 820 டோஸ்களும், கோவாக்சின் தடுப்பூசிகள் 3 லட்சத்து 30 ஆயிரத்து 560 டோஸ்களும் என 16 லட்சத்து 74 ஆயிரத்து 380 தடுப்பூசிகள் அனுப்படவுள்ளது.

அதேபோல் 44 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷூட்டு தடுப்பூசிகள் 21 லட்சத்து 55 ஆயிரத்து 180 டோஸ்களும், கோவாக்சின் தடுப்பூசிகள் 4 லட்சத்து 29 ஆயிரத்து 200 டோஸ்களும் என 25 லட்சத்து 84 ஆயிரத்து 380 டோஸ்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மேலும், தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணிகள் கழகத்தின் மூலம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 740 கோவிஷூல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு 27 கோடியே 96 லட்சத்து 38 ஆயிரத்து 100 ரூபாயும், 2 லட்சத்து 64 ஆயிரத்து 20 டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை கொள்முதல் செய்ய 11 கோடியே 8 லட்சத்து 88 ஆயிரத்து 400 ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசிகளும் ஜூன் மாதம் தமிழ்நாட்டிற்கு வர வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.