ETV Bharat / state

மாலத்தீவு வேலை - அமைச்சர் செஞ்சி மஸ்தான் விளக்கம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

தமிழ்நாட்டில் இருந்து மாலத்தீவிற்கு வேலைக்கு செல்வோர் சரியான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுப்பும் பணி நடைபெறும் என வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இனி சரியான ஒப்பந்தத்தில் மாலத்தீவிற்கு வேலைக்கு அனுப்பப்படுவர் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

author img

By

Published : Nov 1, 2022, 7:53 AM IST

Updated : Nov 1, 2022, 7:59 AM IST

சென்னை: மாலத்தீவு சென்று திரும்பிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வெளிநாடு வாழ் தமிழர் நலன் சார்ந்த துறை சார்பாக வெளிநாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்காக ஓவர்சீஸ் மேன்பவர் கார்பரேசன் லிமிடெட் சார்பாக மேலாண்மை இயக்குநர் மகேஷ்வரனும், நானும் மாலத்தீவு சென்று அங்கு எந்தெந்த பணிக்கு ஆட்கள் தேவை என கேட்டறிந்து பல்வேறு ஒப்பந்ததாரர்களை அழைத்து பேசினோம்.

அந்த அரசின் சார்பில் இந்திய தூதரகம் அதிகாரிகளையும் அந்த நாட்டினுடைய அமைச்சர்களையும். மக்கள் பிரநிதிதிகளையும் சந்தித்து அங்கு இருக்கிற நிலையெல்லாம் அறிந்து வந்திருக்கிறோம். முதலமைச்சரிடம் நாளை மறுநாள்(நவ.3) அங்கு இருக்கிற நிலையை எடுத்து கூற உள்ளோம்.

முதலமைச்சருடைய ஆணைக்கேற்ப அந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சட்டங்களும், அவர்களுடைய குடும்பத்தை சார்ந்த பிள்ளைகளுக்கு கல்வி வழங்கவும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்ல இருக்கிறோம்.

தமிழகத்தில் இருந்து மாலத்தீவிற்கு வேலைக்கு செல்வோருக்கு சரியான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களை வேலைக்கு அனுப்புகின்ற பணி நம் துறை சார்பாக நடைபெறும்” என்பதையும் தெரிவித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: ஈரோடு: மாமன்ற கூட்டத்தில் மேயருடன் திமுக கவுன்சிலர் வாக்குவாதம்

Last Updated : Nov 1, 2022, 7:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.