சென்னை: பட்டாளம் ஸ்ட்ராங்ஸ் ரோடு கேஎல்பி அப்பார்ட்மெண்ட் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுராஜி(49). இவர் கடந்த 2 வருடமாக சவுகார்பேட்டையில் ஜெய் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி மாலை வழக்கம் போல கடையை மூடி விட்டு கடையில் இருந்த 7.5 லட்சம் பணமும் 282 கிராம் தங்க நகைகளையும் பையில் போட்டுக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு அடையாள தெரியாத நபர்கள், சுராஜ் தலையில் அடித்துக் கீழே தள்ளிவிட்டு அவர் வைத்திருந்த பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். இதுகுறித்து, சுராஜ் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், ராயப்பேட்டையை ச் சேர்ந்த சபியுல்லாயாசின்(33) என்பவரை கைது செய்தனர். பின்னர், அவரிடமிருந்து ரூபாய் ஆறு லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுது. இதுதொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியன் 2 படம் தாமதம்: லைகா நிறுவனமே காரணம் இயக்குநர் ஷங்கர் குற்றச்சாட்டு!