தமிழ்நாட்டில் ஜனவரிமுதல் மே மாதம்வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் எவ்வித அசம்பாவிதமும், பாதிப்பும் இல்லாமல் நடக்க வேண்டுமென விலங்குகள் நல வாரியம் சார்பில் சிறப்புக் கண்காணிப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராகக் கால்நடை பராமரிப்புத் துறை முன்னாள் கூடுதல் இயக்குநர் ரவீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குழுவில் கால்நடை பராமரிப்புத் துறை கூடுதல் இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர், துணை இயக்குநர், வீர விளையாட்டு மீட்புக் கழகத் தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்தக் கண்காணிப்புக் குழுக்கள் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களை ஆய்வுசெய்யும். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம், காவல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை அனைவரும் தேவையான ஒத்துழைப்பைத் தர வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: ரஷ்ய அதிபர் வருவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை!