ETV Bharat / state

எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் கட்டுகட்டாக பணம் பறிமுதல்! - வருமான வரி துறை சோதனை

DMK MP Jagathrakshakan: திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய அலுவலகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

S Jagathrakshakan Member of the Lok Sabha
ஜெகத்ரட்சகன் எம்பி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 7:16 AM IST

சென்னை: திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய வீடு, அலுவலகம், மருத்துவமனை, கல்விக் குழுமம், விடுதி, மதுபான ஆலை, கார்ப்பரேட் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஐந்தாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (அக்.9) சோதனை மேற்கொண்டனர்.

இந்த வருமான வரித்துறை சோதனையானது, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம், பொருட்கள் உள்ளிட்டவற்றை கணக்கீடு செய்து, அது தொடர்பாக ஜெகத்ரட்சகன் மற்றும் அவரின் மகள் ஸ்ரீ நிஷா, மருமகன் நாராயணசாமி இளமாறன் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ஜெகத்ரட்சகன் இல்லத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பாலாஜி மருத்துவமனையின் நிர்வாக அலுவலகம் அக்கார்ட் இன்டர்நேஷ்னல் பள்ளியின் கார்ப்பரேட் அலுவலகம் உள்ளிட்டவைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை, நான்கு அட்டைப் பெட்டிகள் முழுவதும் வைத்து இரண்டு கார்களில் கொண்டு சென்றுள்ளனர்.

அவருக்கு தொடர்புடைய இடங்களில் இருந்து என்னென்ன ஆவணங்கள் எடுக்கப்பட்டது, என்ன பொருட்கள், எவ்வளவு பணம் உள்ளிட்டவற்றை கணக்கீடு செய்து, அதற்கான ஒரு ஆவணத்தை தயாரித்து, அதில் ஜெகத்ரட்சகன் கையொப்பத்தைப் பெற்று ஆவணங்களை தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

அதேபோல், ஜெகத்ரட்சகன் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் குறித்து பட்டியலை தயாரித்து அவைகளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது. அதன் பேரில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நலம் நலம் அறிய ஆவல்.. காலம் கடந்த உணர்வுகளை சுமக்கும் கடிதங்கள்.. தேசிய அஞ்சல் தின சிறப்புத் தொகுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.