ETV Bharat / state

ஜெயலலிதாவின் துணிச்சல், தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றி- பேரறிவாளன் விடுதலை குறித்து அதிமுக அறிக்கை!

author img

By

Published : May 18, 2022, 5:12 PM IST

2018இல், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான், உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு அடித்தளமாகும் என பேரறிவாளன் விடுதலை குறித்து அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

முழுக்க முழுக்க அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி தான் - பேரறிவாளன் விடுதலை குறித்து அதிமுக அறிக்கை

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எழுவரில் ஒருவரான பேரறிவாளன், இன்று (மே18) உச்ச நீதிமன்றத்தால் அரசியல் அமைப்பு சாசனம் 142இன் கீழ் உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து, ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் இன்று விடுதலையான நிலையில் இது குறித்து அரசியல் தலைவர்கள், நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேருக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல.

அதிமுக அறிக்கை
அதிமுக அறிக்கை

மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின் படி பேரறிவாளனையும் மற்ற 6 பேரையும் எனது தலைமையிலான அரசு விடுதலை செய்யும் என 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

மேலும் 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்றைய உச்ச நீதிமன்றத்தின் தீர்புக்கு அடித்தளமாகும்.

இந்த தீர்ப்பு முழுக்க முழுக்க அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி தான். மேலும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும், “ஜெயலலிதாவின் துணிச்சல் மற்றும் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றி” என்றும் கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலை -மாநில உரிமையை நிலை நாட்டும் முயற்சியில் வெற்றி : ஸ்டாலின் கூறும் வழக்கின் பின்னணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.