ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author img

By

Published : Jul 28, 2020, 4:53 PM IST

ன மழைக்கு வாய்ப்பு
ன மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ”தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும். ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

அதுபோல நாளை (29.07.20) நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும். மற்றும் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இதனால் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக கோவை பெரியநாயக்கன்பாளையம், திருவாரூர் வலங்கைமான், நன்னிலம் தலா 6 சென்டி மீட்டர் மழையும் , திருவாரூர், குடவாசல், திருவாரூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம் திருப்பூண்டி தலா 5 சென்டி மீட்டர் மழையும், நாகப்பட்டினம் மயிலாடுதுறை, கொள்ளிடம்,தஞ்சாவூர் பாபநாசம், கோவை வேளாண் பல்கலைக்கழகம் தலா 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை தெற்கு வங்கக் கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளில் ஜூலை 28 ஆம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளில் 28, 29 தேதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், அடுத்த நான்கு தினங்களுக்கு கடலோர கேரளா லட்சத்தீவு மற்றும் மாலை தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில், தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த ஐந்து தினங்களுக்கு பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.