சென்னை: தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ள மாநில அரசு, அத்துடன் மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்கவும் தீர்மானித்துள்ளது. இதில் நகர்ப்புற வீடுகளில் தற்போது இருக்கும் டிஜிட்டல் மீட்டர்களுக்கு இரு மாதங்களுக்கு ரூ.120 வீதமும், இனிப் பொருத்தப்படவுள்ள ஸ்மார்ட் மீட்டர்களுக்கு ரூ.350 வீதமும் வாடகை வசூலிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரூ.50 கட்டணத்தை ரத்து செய்ததை கொண்டாட்டமாக அறிவித்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் ரூ.350 கட்டணத்தை மக்கள் மீது திணிப்பது நியாயமல்ல. அத்தியாவசியத் தேவைகளுக்குப்பணம் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலையில், மின்சார மீட்டருக்கு வாடகை செலுத்த அவர்களால் முடியாது.
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நிலையைக்கருத்தில் கொண்டு மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிப்பது, மின்சாரக் கட்டணத்தை 52 விழுக்காடு அளவுக்கு உயர்த்துவது போன்ற மக்களைப் பாதிக்கும் முடிவுகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மின் கணக்கிடுவதை எளிமையாக்கும் வகையில் 'ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல்' - அமைச்சர் செந்தில் பாலாஜி