நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடா்ந்து தீவிரமடைந்து வருகிறது. அந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவருகிறது. கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, வரும் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது வரை தமிழ்நாட்டில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உள்ளது. இதில், 422 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், மார்ச் 24ஆம் தேதி இண்டிகோ, ஏர் ஏசியா விமானங்களில் சென்னை வந்தவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, மார்ச் 24இல் டெல்லியிலிருந்து காலை 6.05 மணிக்கு சென்னை வந்த இண்டிகோ விமான பயணிகளும், அதேபோல் இரவு 9.10 மணிக்கு ஏர் ஏசியா விமானத்தில் சென்னை வந்த பயணிகளும், 28 நாள்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஏதேனும் மருத்துவ உதவி உள்ளிட்டவை தேவைப்பட்டால், சென்னை மாநகராட்சியைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களை எச்சரிக்க ட்ரோன் ஒலிப்பெருக்கி - காவல் துறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை