சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் மே 15ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தகவலில், “தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 16ஆயிரத்து ஒரு நபருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த மேலும் 30 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரிய வந்தது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து தற்போதுவரை 6 கோடியே 52 லட்சத்து 27 ஆயிரத்து 420 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 34 லட்சத்து 54 ஆயிரத்து 621 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 359 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 79 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 16 ஆயிரத்து 237 என உயர்ந்துள்ளது.
மேலும் சென்னையில் 16 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 7 நபர்களுக்கும் கோயம்புத்தூர் திருச்சியில் தலா இரண்டு நபர்களுக்கும் திருவள்ளூர், சிவகங்கை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர் என 30 பேருக்கும் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பரிசோதனை செய்யப்படும் நோயாளிகளில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மாநில அளவில் 0.2 என உள்ளது. 30 மாவட்டங்களில் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் சிகிச்சை பெறவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இலங்கைக்கு 28 கோடி மதிப்புள்ள மருந்துப் பொருட்கள்' - அமைச்சர் மா. சுப்பிரமணியன்