தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று (மே 17) மட்டும் 6,150 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்ப் பரவலைத் தடுக்க மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை என இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது.
ஊரடங்கு காலத்தில், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இருந்தபோதிலும், சென்னையில் நேற்று (மே 17) மட்டும் ஊரடங்கு விதிகளை மீறியதாக 2,855 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் பயணித்ததாக 3,082 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகக் கவசம் அணியாமல் சென்றதாக 3,619 நபர்கள் மீது வழக்குப்பதிவு, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காதது தொடர்பாக 392 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 49 கடைகள் மூடப்பட்டு, 8.59 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா நிவாரண நிதி வழங்கிய நளினி