சென்னை: இந்தியத் தொழில்நுட்பக் கழகம் சென்னையின் (Madras IIT) கீழ் இயங்கும், சாலைப் பாதுகாப்புக்கான சிறப்பு மையம் (CoERS) சார்பில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறைக்கு உதவும் வகையில், "ரூட் காஸ் அனாலிசிஸ் மேட்ரிக்ஸ் (root cause analysis matrix) முறையைப் பயன்படுத்தி விபத்து விசாரணை மேற்கொள்ளப் பயிற்சி" என்ற திட்டத்தை செப்.06 முதல் 09 தேதி வரை நடத்த திட்டம் இட்டு இருந்தது.
இதில் விபத்தின் முக்கிய காரணங்களைக் கண்டறிவது, மனிதாபிமானம் அடிப்படையில் விசாரணையை அணுகுவது என வழக்கை விசாரிக்கும் அதிகாரிக்குத் திறன் சார்ந்த பயிற்சிகள் வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நடக்கும் இந்த பயிற்சியில் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
-
In an initiative that will be of immense assistance to the Greater Chennai Traffic Police (@ChennaiTraffic), @CoERS_IITM, @iitmadras, is conducting a program 'Training on Structured Crash Investigation using Root Cause Analysis Matrix (RCAM)’ from September 6–9, 2023.@vbchennai pic.twitter.com/fsKIqxsAJ0
— IIT Madras (@iitmadras) September 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In an initiative that will be of immense assistance to the Greater Chennai Traffic Police (@ChennaiTraffic), @CoERS_IITM, @iitmadras, is conducting a program 'Training on Structured Crash Investigation using Root Cause Analysis Matrix (RCAM)’ from September 6–9, 2023.@vbchennai pic.twitter.com/fsKIqxsAJ0
— IIT Madras (@iitmadras) September 7, 2023In an initiative that will be of immense assistance to the Greater Chennai Traffic Police (@ChennaiTraffic), @CoERS_IITM, @iitmadras, is conducting a program 'Training on Structured Crash Investigation using Root Cause Analysis Matrix (RCAM)’ from September 6–9, 2023.@vbchennai pic.twitter.com/fsKIqxsAJ0
— IIT Madras (@iitmadras) September 7, 2023
மேலும் சென்னை ஐஐடி தயார் செய்துள்ள செயலி குறித்த பயிற்சியும், காவல்துறை அதிகாரிகளுக்கு விபத்து ஏற்படும் போது, விபத்து குறித்த தரவுகளைச் சேகரிக்கும் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி திட்டத்தில் பெருநகர சென்னை காவல்துறையின் கூடுதல் காவல் ஆணையர் (போக்குவரத்து) ஆர்.சுதாகர் பங்கேற்றார்.
இதையும் படிங்க: ஆதித்யா எல்1 செல்பி கிளிக்கை வெளியிட்ட இஸ்ரோ!
அப்போது அவர் பேசும் போது, "போக்குவரத்து விபத்துக்களைப் பற்றி விசாரிக்கும் போது சில சமயங்களில் மனித அம்சத்தை நாம் தவறவிடுகிறோம். மேலும் விசாரணைகளை எவ்வாறு நடத்துகிறோம் என்பதில் ஒரு மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இதைப் புரிந்துகொள்ள இது உதவும். எங்கள் புலனாய்வு முறைகளின் அணுகுமுறையில் மாற்றத்துடன், சிறந்த நிலையை அடைவோம். இது எதிர்கால விபத்துகள் நிகழாமல் தடுக்க மிகவும் பயனுள்ள விசாரணைகளை வெளிக்கொணர உதவும்" எனத் தெரிவித்தார்.
-
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்⁰கற்றனைத் தூறும் அறிவு. The more you dig a sand-spring, more the flow. The more you learn more the wisdom.
— R Sudhakar IPS (@R_Sudhakar_Ips) September 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Course on Investigation of Road accidents Root cause analysis -in collaboration with #IITMadras to the officers of @ChennaiTraffic pic.twitter.com/dnOSjlckPV
">தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்⁰கற்றனைத் தூறும் அறிவு. The more you dig a sand-spring, more the flow. The more you learn more the wisdom.
— R Sudhakar IPS (@R_Sudhakar_Ips) September 6, 2023
Course on Investigation of Road accidents Root cause analysis -in collaboration with #IITMadras to the officers of @ChennaiTraffic pic.twitter.com/dnOSjlckPVதொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்⁰கற்றனைத் தூறும் அறிவு. The more you dig a sand-spring, more the flow. The more you learn more the wisdom.
— R Sudhakar IPS (@R_Sudhakar_Ips) September 6, 2023
Course on Investigation of Road accidents Root cause analysis -in collaboration with #IITMadras to the officers of @ChennaiTraffic pic.twitter.com/dnOSjlckPV
மேலும் இந்த பயிற்சி குறித்து காவல்துறையின் கூடுதல் காவல் ஆணையர் (போக்குவரத்து) ஆர்.சுதாகர் தனது X சமூக வலைத்தள பக்கத்தில், "தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு" என்ற திருக்குறளை தமிழிழும் அதன் ஆங்கில மொழியாக்கத்தையும் குறிப்பிட்டுப் பதிவிட்டு இருந்தார்.