சென்னை, திருவொற்றியூர் தொகுதியில் திமுக சார்பில் கே.பி.பி.சங்கர், அதிமுக சார்பில் கே.குப்பன், அமமுக சார்பில் எம்.சவுந்திரபாண்டியன், மக்கள் நீதி மய்யம் டி.மோகன் உள்பட 22 பேர் களத்தில் உள்ளனர். நாதக சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்கியுள்ளார்.
இதையடுத்து, இத்தொகுதியில் நேற்று (மார்ச்.22) சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் மக்களிடையே பேசுகையில், ”திருவொற்றியூர் தொகுதியை மட்டுமல்ல, மொத்த நாட்டையும் சரி செய்வதற்காகதான் நான் வந்துள்ளேன். நாதக ஆட்சியில் ஆரம்பப் பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை அனைத்து கல்வியும் இலவசம்.
நான் மக்களின் வேட்பாளர், என் வெற்றி மாற்று அரசியலுக்கான வெற்றி. ஊழலுக்கு எதிரான வெற்றி. ஆகவே விவசாயி சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். எல்லையில் அய்யானர் நிற்பது போல நின்று உங்களைக் காப்பேன், எந்தப் பிரச்னையாக இருந்தாலும் என்னை மீறி தான் வரவேண்டும்” என்றார்.
முன்னதாக, நாதகவைச் சேர்ந்த தம்பதியின் குழந்தைக்கு ’ராவணன்’ என அவர் பெயர் சூட்டினார்.
இதையும் படிங்க:’வாக்குறுதியை நிறைவேற்றியவர் ஜெயலலிதா, வாக்கு தவறியவர் கருணாநிதி’ - கே.சி.பழனிசாமி