ETV Bharat / state

மனித உரிமை ஆணைய உத்தரவுகள் மாநில அரசைக் கட்டுப்படுத்தும் - சென்னை உயர் நீதிமன்றம் - chennai high court order

சென்னை: மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுகள் மாநில அரசை கட்டுப்படுத்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court
chennai high court
author img

By

Published : Feb 6, 2021, 5:50 PM IST

மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் மற்றும் எம்.சுந்தர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு, மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு என்பது அரசை கட்டுப்படுத்தக்கூடியது என்றும் அதை உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்த தவறினால், ஆணையம் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. எக்காரணத்தை கொண்டும் மனித உரிமை ஆணைய பரிந்துரைகளை, தவிர்க்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனத் தெளிவுபடுத்திய நீதிபதிகள், அதே நேரத்தில் ஆணைய உத்தரவுகளை எதிர்த்து அரசும் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் கூறினர்.

தொடர்ந்து, மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இழப்பீடு வழங்க பிறப்பிக்கப்படும் உத்தரவில், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமிருந்தே இழப்பீட்டை வசூலித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், எவ்வளவு தொகை மற்றும் கால நிர்ணயம் குறித்து உரிய நோட்டீஸ் அனுப்பி முடிவு செய்து கொள்ளலாம் எனவும், மனித உரிமை ஆணைய பரிந்துரையின் பேரில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு- இருவர் உயிரிழப்பு, 28 பேர் காயம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.