ETV Bharat / state

பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள்? - சபாநாயகர் அப்பாவு விளக்கம்! - சபாநாயகர் அப்பாவு விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ம் தேதி வரை நடைபெறும் என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு
author img

By

Published : Mar 20, 2023, 7:06 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 20) தொடங்கியது. நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக சபாநாயகர் அப்பாவு தலைமையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, "சட்டப்பேரவையில் நாளை (மார்ச் 21) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் வரும் 29-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 21-ம் தேதி வரை 15 நாட்கள் நடைபெறுகிறது. நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கையின் மீதான விவாதம் வரும் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறும். அன்றைய தினம் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். சட்டப்பேரவை 15 நாட்கள் காலையிலும், 7 நாட்களும் மாலையிலும் நடக்கும்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு முன்னிருக்கை ஒதுக்கீடு செய்வது குறித்து, காங்கிரஸ் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். எதிர்க்கட்சி (அதிமுக) துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பதில் அளிக்கப்பட்டுவிட்டது. அதிமுக தரப்பில் எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை" என்றார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் திருப்பி அனுப்பினார். ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், மீண்டும் அந்த மசோதாவை நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: செப்.15 முதல் மகளிர் உரிமைத் தொகை: பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.