ETV Bharat / state

வாக்குகளை வேட்டையாடும் உத்தியா தேர்தல் இலவசங்கள்? - இலவச சைக்கிள்

களைகட்டத் தொடங்கி இருக்கிறது தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல். கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தலின் போது, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, 'இந்தத் தேர்தலின் கதாநாயகன் திமுகவின் தேர்தல் அறிக்கை தான்' என்றார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. திமுகவின் அந்த அறிக்கையில் அத்தனை இலவச அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. அது வெற்று அறிவிப்புகள் தான், அவைகளைச் செயல்படுத்திட சாத்தியங்கள் இல்லை என விமர்சிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, தன் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றியது. அதற்குப் பின்னர் வந்த தேர்தலில் அதிமுக, 'விலையில்லா பொருட்களை' வழங்குவதாக வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றது. ஜெயலலிதாவும், தன் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றினார். திராவிடக் கட்சிகளின் இந்தத் தேர்தல் இலவச அறிவிப்புகள், கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி இன்று பழனிசாமி வரை தொடர்கிறது. அதிமுக, இந்த முறை பெண்களுக்கு 'அம்மா வாஷிங் மிஷின்' வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது. இந்த அறிவிப்புகள் வெறும் வாக்கு வேட்டைக்கு மட்டும் தான் உதவியதா தமிழ்நாட்டில்...

வாக்குகளை வேட்டையாடும் உத்தியா
தேர்தல் இலவசங்கள்
author img

By

Published : Mar 24, 2021, 10:43 AM IST

தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றுப் பக்கங்களை நாம் திருப்பி பார்த்தோமானால், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் கால் ஊன்றிய காலத்திலிருந்தே, இந்த அசாத்தியங்களைச் சாத்தியமாக்கியத் தேர்தல் அறிவிப்புகள் தொடங்கிவிட்டது தெரியவரும்.

திராவிட சித்தாந்தங்களை அரசியல் ரீதியாக செயல்படுத்திய திமுகவின் நிறுவனர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணாவிடம் இருந்து இந்த இலவசங்கள் தொடங்குகின்றன. கடந்த 1967ஆம் ஆண்டு தேர்தலில், 'லட்சியம் மூன்று படி; நிச்சயம் ஒரு படி' என அண்ணா அறிவித்தார். தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்கினார்.

கடந்த 1923ஆம் ஆண்டு அன்றைய 'மெட்ராஸ் பிரசிடென்சி'யில் இருந்த, சென்னை கார்ப்பரேஷன் பள்ளியில் ஏழை, எளிய மாணவர்களுக்குப் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் திறந்த காமராஜர், மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காக, 1960 ஆம் ஆண்டு சென்னையைத் தாண்டி சில பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.

திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த எம்.ஜி.ராமச்சந்திரன், கடந்த 1982ஆம் ஆண்டு மதிய உணவு திட்டத்தினை தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தினார். இது, எம்.ஜி.ஆர் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கச் செய்து, இறக்கும் வரையில் முதல்வராக அவரை அமர்த்தியது அரசியல்.

அதனைக் கடந்து சத்துணவு திட்டம் சமூகத்தில் நிகழ்த்திய மாற்றம் சரித்திரம். மதியம் ஒருவேளை கிடைக்கின்ற அரிசி உணவுக்காகப் பல ஏழை, எளிய வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்கூடம் வந்தனர்.

அங்கு அவர்களின் வயிறு நிரம்பிய அதேவேளையில், அறிவுக்கும் விதை தூவப்பட்டது என்பது வரலாற்று நிதர்சனம். இந்த வரலாற்று முன்னோட்டங்களுடன், கடந்த 2006ஆம் ஆண்டு மீண்டும் அரங்கேறத் தொடங்கியது தேர்தல் இலவசங்கள்.

அந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின் போது, அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி, தனது தேர்தல் அறிக்கையில் பல இலவசங்களை அறிவித்திருந்தார்.

வாக்குகளை வேட்டையாடும் உத்தியா தேர்தல் இலவசங்கள்?

திமுகவின் அந்த அறிக்கையில், இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, விவசாயிகளின் கடன் தள்ளுபடி, ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி வீதம் 20 கிலோ அரிசி, வீடில்லாதவர்களுக்கு வீட்டுமனை, இலவச கேஸ் ஸ்டவ், இலவச மின்சாரம் என, நீண்டது பட்டியல். தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பேற்றதும், பதவி ஏற்பு விழாவில், மக்கள் முன்னிலையில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து கையெழுத்திட்டு, தன் வாக்குறுதியை நிறைவேற்றினார்.

அதனைத் தொடர்ந்து தேர்தலின் வாக்குறுதி அளிக்கப்பட்ட ஒவ்வொன்றையும் நிறைவேற்றினார். தேர்தலின் போது, உறுதியளிக்கப்பட்ட ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி வீதம் 20 கிலோ அரிசி திட்டம் ஆட்சிக்கு வந்ததும், 35 கிலோவாக உயர்த்தப்பட்டது. அண்ணாவின் ஆசையை தம்பி கருணாநிதி நிறைவேற்றினார்.

விவசாயமும், விவசாயிகளும் தடுமாறி வந்த அந்த வேளையில் பல வீடுகளில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்ட அரிசியே பசியாற்றின. அன்று வழங்கப்பட்ட வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள், பத்துக்குப் பத்து குடிசை வீடுகளுக்குள்ளும் சென்று, அங்கு வசிப்பவர்களையும், நவநாகரீக வாழ்க்கையில் பங்கேற்க வைத்தன.

அடுத்து வந்த 2011ஆம் ஆண்டுத் தேர்தலில், கருணாநிதியின் இந்த உத்தியை சற்று மாற்றி அதிமுகவின் ஜெயலலிதா தொடர்ந்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, பெண் பிள்ளைகளுக்குப் பள்ளி சென்று வர விலையில்லா மிதிவண்டி, தாலிக்குத் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம், கர்ப்பிணிகளுக்கு ரூ.12 ஆயிரம் உதவித்தொகை, ஏழை, எளியவர்களுக்கு விலையில்லா ஆடு, மாடு என அறிவித்தார். வெற்றி பெற்ற பின்னர் அதனை செயல்படுத்தவும் செய்தார்.

மாணவிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டி திட்டம், பள்ளிக்கு வர இயலாமல் படிப்பைப் பாதியில் நிறுத்தும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இந்த வெற்றி அந்த குழந்தைகளை அடுத்தடுத்தப் படிகளில் ஏற்றிவிட்டது. விலையில்லா மடிக்கணினிகள் பல பள்ளி, கல்லூரி மாணவர்களை செய்முறை வகுப்புகளைத் தாண்டி கணினியைக் கையாள வகை செய்து, அவர்களுடைய கனவின் அடுத்த கட்ட வாசல்களைத் திறந்து விட்டன என்பதை யாரும் மறுக்கவும், மறக்கவும் முடியாது.

திராவிட சித்தாந்தத்தின், இந்த அசாத்தியங்களைச் சாத்தியமாக்கும் தேர்தல் வாக்குறுதிகள் இந்தத் தேர்தலும் தொடர்கின்றன. கடந்த தேர்தலில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வழங்கப்பட்ட மானிய விலை அம்மா இருசக்கர வாகனம், இந்த முறை கல்லூரி செல்லும் மாணவிகளுக்கும் வழங்குவதாக அறிவித்திருக்கிறது அதிமுக.

அதே போல, விலையில்லா 'அம்மா வாஷிங் மிஷின்' வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. இரு பெரும் கட்சிகளும் பெண்களுக்கு மாதாந்திர உரிமைத் தொகைகள் வழங்குவதாக வாக்குறுதிகள் அளித்திருக்கின்றன. அரசியல் ரீதியாக இதன் சாதகப் பாதகங்களை பலர் அலசி ஆராய்ந்து வருகின்றனர். இவை எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். முந்தைய ஆட்சிகளைப் போல இந்த அறிவிப்புகள் திட்டங்களாக நடைமுறைக்கு வரும் போது, அவை சமூகத்தின் புதிய வாசல்களை திறந்து விடும் என்ற உண்மையையும், நாம் புறந்தள்ளுவதற்கு இல்லை.

இதையும் படிங்க: 'டம்மி' வேட்பாளரை நியமிக்கும் கட்சிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.