ETV Bharat / state

KP Anbalagan case: தற்கொலைக்குத் தூண்டிய கே.பி. அன்பழகன்? - காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு - சென்னை அண்மைச் செய்திகள்

தற்கொலைக்குத் தூண்டியதாக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் (KP Anbalagan case) மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு குறித்து பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்கொலைக்கு தூண்டிய கே.பி.அன்பழகன்?
தற்கொலைக்கு தூண்டிய கே.பி.அன்பழகன்?
author img

By

Published : Nov 19, 2021, 7:45 AM IST

சென்னை: தருமபுரியின் மோளையனூரைச் சேர்ந்தவர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்தார்.

அதில், “2011ஆம் ஆண்டு நான் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது டெண்டர் ஒதுக்குவது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் உதவியாளர் வேலாயுதத்துடன் தகராறு ஏற்பட்டது. பின்னர் கே.பி. அன்பழகன் செல்வாக்கால், நான் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன்.

தற்கொலைக்கு முயற்சிக்க மூளைச் சலவை

கே.பி. அன்பழகனுடன் இருந்த அரசியல் மோதலுக்காக, தற்கொலைக்கு முயற்சிக்கும்படி மூளைச்சலவை செய்யப்பட்டேன். அதன்படி தலைமைச் செயலகத்தில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், தீக்குளிக்க முயன்று கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டேன்.

அரசியல் லாபத்துக்காக என்னை தற்கொலைக்குத் தூண்டிய கே.பி. அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகார் அளித்ததால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனால் நான் அமைதியாகிவிட்டேன்.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கே.பி. அன்பழகன் மீது உரிய சாட்சி ஆவணங்களுடன் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 22ஆம் தேதி மறுவிசாரணை

இந்த மனுவானது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் முன்பு நேற்று (நவம்பர் 18) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் தாமோதரன், வழக்கு தொடர்பாகப் பதிலளிக்க கால அவகாசம் கோரினார்.

இதனையடுத்து மனுதாரர் அளித்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, காவல் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகின்ற 22ஆம் தேதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: 'பாஜகவின் போராட்டம் கேலிக்குரியது' - ஜி. ராமகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.