ETV Bharat / state

சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் அடுத்த 24 மணி நேரத்திற்கு யாரும் நுழைய முடியாது: ஏன் தெரியுமா?

சென்னை: உயர் நீதிமன்ற வளாகத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது என்பதை அறிவிக்கும் வகையில் இன்றிரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை, அதன் அனைத்து வாயில்களும் மூடப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற பதிவுத் துறை அறிவித்துள்ளது.

Highcourt gates closed next 24 hours because no one claims possession of highcourt
author img

By

Published : Nov 9, 2019, 7:24 PM IST

150 ஆண்டு பழமையும் பெருமையும் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தை, சட்டத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அரசின் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்திவருகின்றனர். அதே நேரத்தில் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் நீதிமன்ற வளாகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. இந்த வளாகத்தை அனைவரும் பயன்படுத்தினாலும், யாரும் உரிமை கோர முடியாது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் ஆண்டுக்கு ஒருநாள் மூடப்படுவது வழக்கம்.

இதன்படி, பொதுமக்களுக்காக எப்போதும் திறந்திருக்கும் உயர் நீதிமன்றத்தின் ஏழு வாயில்களும் நவம்பர் மாதத்தின் ஒரு சனிக்கிழமையில் இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை என 24 மணி நேரம் மூடப்படும். பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் இந்த நடைமுறைப்படி, நவம்பர் 9ஆம் தேதி இரவு 8 மணி முதல் நவம்பர் 10ஆம் தேதி இரவு 8 மணி வரையிலான 24 மணி நேரத்துக்கு அனைத்து வாயில்களும் மூடப்படும் என்று உயர் நீதிமன்ற பதிவுத் துறை அறிவித்துள்ளது.

இந்த 24 மணி நேரத்தில் நீதிமன்ற வளாகத்துக்குள் அரசுத் துறையினர், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் என யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இதையும் படிங்க: அயோத்தி தீர்ப்பு: உச்ச நீதிமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு!

Intro:Body:சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது என்பதை அறிவிக்கும் வகையில், இன்றிரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை அதன் அனைத்து வாயில்களும் மூடப்படும் என்று உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.

150 ஆண்டுகள் பழமையும், பெருமையும் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தை, சட்டத்துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அரசின் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கின்றது. இந்த வளாகத்தை அனைவரும் பயன்படுத்தினாலும், யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் ஆண்டுக்கு ஒரு நாள் மூடப்படுவது வழக்கம்.

இதன்படி, பொது மக்களுக்காக எப்போதும் திறந்திருக்கும் உயர்நீதிமன்றத்தின் ஏழு வாயில்களும் நவம்பர் மாதத்தில் ஒரு சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுகிழமை இரவு 8 மணி வரை மூடப்படும்.

பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் இந்த நடைமுறைப்படி, நவம்பர் 9 ம் தேதி இரவு 8 மணி முதல் நவம்பர் 10ம் தேதி இரவு 8 மணி வரையிலான 24 மணி நேரத்துக்கு அனைத்து வாயில்களும் மூடப்படும் என்று உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.

இந்த 24 மணி நேரத்தில் நீதிமன்ற வளாகத்துக்குள் அரசு துறையினர், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.