சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஐ.சி.எஃப் காலனி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து காவல் ஆய்வாளர் பரணிதரன் தலைமையில் காவலர்கள் மாறுவேடத்தில் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது, இரு இளைஞர்கள் சந்தேகத்திற்கு இடமாக அங்கு சுற்றி கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த காவலர்கள் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர்களிடம் ஹெராயின் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.5லட்சம் எனக் கூறப்படுகிறது.
விசாரணையில், இருவரும் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த ஜஹாங்கிர் (32), மசாதுல்(31) என்பதும், அம்பத்தூர், கள்ளிக்குப்பம், செந்தில் நகரில் தங்கியிருந்து கட்டுமான வேலை செய்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க: பல நூறு கோடி மோசடி செய்த வின்ஸ்டார் சிவகுமார் அதிரடி கைது!